Kathir News
Begin typing your search above and press return to search.

முதியவர் வீடுகளில் உணவு, மருந்து பொருட்களை வழங்கும் தவளகுப்பம் போலீஸார் - குவியும் பாராட்டு!

முதியவர் வீடுகளில் உணவு, மருந்து பொருட்களை வழங்கும் தவளகுப்பம் போலீஸார் - குவியும் பாராட்டு!

முதியவர் வீடுகளில் உணவு, மருந்து பொருட்களை வழங்கும் தவளகுப்பம் போலீஸார் - குவியும் பாராட்டு!

Kathir WebdeskBy : Kathir Webdesk

  |  6 April 2020 7:34 AM GMT

கொரோனா வைரஸ் பரவல் தடுப்பு நடவடிக்கையாக நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ள நிலையில், புதுச்சேரியிலும் இந்த உத்தரவு நடைமுறையில் உள்ளது. இதன் காரணமாக பொதுமக்கள் வீடுகளுக்குள் இருந்து தனிமைப்படுத்திக் கொள்ள வேண்டும் என்றும் அரசு உத்தரவிட்டுள்ளது.


இருந்தாலும் மக்கள் சிலர் வீட்டை விட்டு வெளியே வருவது, இருசக்கர வானங்களில் சுற்றுவது என தொடர்கிறது. இதனிடையே, புதுச்சேரி அடுத்த தவளக்குப்பம் பகுதியில் தடை உத்தரவை மீறி சுற்றித்திரிந்தவர்களை சப் இன்ஸ்பெக்டர் இளங்கோ தலைமையிலான போலீஸார் எச்சரித்ததுடன், சிலர் மீது வழக்குப் பதிவு செய்து நடவடிக்கையும் எடுத்து வருகின்றனர். இந்நிலையில் தவளக்குப்பம் காவல் நிலையத்துக்குட்பட்ட பகுதிகளில் வசிக்கும் முதியவர்கள் வீட்டில் இருந்தபடியே தங்களுக்கு தேவையான உணவு, மருந்து மாத்திரைகள் உள்ளிட்ட உதவிகளை கேட்டு பெறும் வகையில் புதிய முயற்சி ஒன்றை போலீஸார் கையில் எடுத்துள்ளனர்.


இதற்காக உதவி தேவைப்படும் முதியோர் தொடர்பு கொள்ள 9994189981 என்ற கைபேசியிலும், 0413-2618066 என்ற தொலைபேசியிலும் தொடர்பு கொள்ளும்படி தவளக்குப்பம் காவல் நிலைய உதவி ஆய்வாளர் இளங்கோ கேட்டுகொண்டார். அதன்படி உதவி கேட்டு கொண்டவர்களுக்கு உதவி ஆய்வாளர் இளங்கோ தலைமையிலான போலீஸார், அவர்களது வீட்டுக்கு சென்று அவர்கள் கேட்ட உணவு, மருந்து உள்ளிட்ட பொருட்களையும் வழங்கினார். போலீஸாரின் இந்த முயற்சி அப்பகுதியில் வரவேற்பை பெற்றுள்ளது.



Next Story
கதிர் தொகுப்பு
Trending News