ஹிஸ்புல் முஜாஹிதீன் தீவிரவாதி யாரும் இல்லாத பகுதியாக மாறிய புர்ஹான் வானியின் சொந்த ஊர் ட்ரால்.! #Police #Terrorists #JammuKashmir
ஹிஸ்புல் முஜாஹிதீன் தீவிரவாதி யாரும் இல்லாத பகுதியாக மாறிய புர்ஹான் வானியின் சொந்த ஊர் ட்ரால்.! #Police #Terrorists #JammuKashmir

காஷ்மீரில் தீவிரவாதத்திற்கு எதிரான போரில் ஒரு மிகப்பெரும் மைல் கல்லாக, தெற்கு காஷ்மீரைச் சேர்ந்த ட்ரால் பகுதியை, ஹிஸ்புல் முஜாஹிதீன் தீவிரவாதி ஒருவன் கூட இல்லாத பகுதியாக ஜம்மு காஷ்மீர் போலீஸ் அறிவித்துள்ளது. 1989லிருந்து, 30 வருடங்களில் இவ்வாறு அறிவிக்கப்பட்டிருப்பது இதுவே முதன் முறையாகும் என்று ஜம்மு&காஷ்மீர் IGP விஜயகுமார் தெரிவித்துள்ளார் என இந்தியா டுடே செய்தி வெளியிட்டுள்ளது.
தெற்கு காஷ்மீரைச் சேர்ந்த ட்ரால் பகுதி, ஹிஸ்புல் முஜாஹிதீன் தீவிரவாதத் தளபதி புர்ஹான் வானியின் சொந்த ஊராகும். அவன் 2016ல் கொல்லப்பட்ட போது இந்தப்பகுதி மிகுந்த பிரச்சினைகளையும், பதற்றத்தையும் சந்தித்தது என்பதை நாம் கவனத்தில் கொள்ள வேண்டும்.
அமைதி, சட்டம் மற்றும் ஒழுங்கை மீட்டெடுப்பதற்காகவும் காஷ்மீரில் செயல்படும் பயங்கரவாதிகளை ஒழிப்பதற்காகவும், இந்திய இராணுவம், மத்திய ரிசர்வ் போலிஸ் படை மற்றும் ஜம்மு காஷ்மீர் போலிஸ் ஆகியவற்றை உள்ளடக்கிய பாதுகாப்புப் படையினர் தீவிரமாக செயல்பட்டு வருகின்றனர்.
2020ல் மட்டும், நூற்றுக்கும் மேலான தீவிரவாதிகளை பாதுகாப்புப் படையினர் என்கவுண்டர் செய்திருக்கிறார்கள். இந்த ஜூன் மாதத்தில் மட்டும், 19 என்கவுன்டர்களில் 35 தீவிரவாதிகள் கொல்லப்பட்டுள்ளனர். இது இன்னும் வேகமெடுத்து வருகிறது.