சத்குரு பிறந்தநாளுக்கு அரசியல் தலைவர்கள், பிரபலங்கள் வாழ்த்து
சத்குரு பிறந்தநாளுக்கு அரசியல் தலைவர்கள், பிரபலங்கங்கள் வாழ்த்து ட்விட்டரில் 'நதிகளுக்கு புத்துயிர் ஊட்டும் தினம்' தேசிய அளவில் No.1 ட்ரெண்டிங்
By : Karthiga
சத்குரு அவர்களின் பிறந்த நாளான செப்டம்பர் 3-ம் தேதி, நதிகளுக்கு புத்துயிர் ஊட்டும் தினமாக அனுசரிக்கப்படுகிறது. சத்குருவின் பிறந்த தினம் இன்று ஈஷா யோகா மையத்திலும், அதனை சுற்றியுள்ள கிராமங்களிலும் வெகு விமரிசையாக கொண்டாடப்பட்டது. மேலும் சத்குருவுக்கு அரசியல் தலலைவர்கள், பிரபலங்கங்கள் என பல்வேறு தரப்பினரும் வாழ்த்து தெரிவித்தனர்.
மத்திய பிரதேச முதல்வர் திரு. ஷிவ்ராஜ்சிங் சவுகான், கர்நாடக முதல்வர் திரு. பசவராஜ் பொம்மை, உத்தரகாண்ட் முதல்வர் திரு. புஷ்கர் சிங் தமி, காங்கிரஸ் மூத்த தலைவரும் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினருமான திரு. கமல்நாத், மத்திய அமைச்சர்களான திரு.நிதின் கட்கரி, திருமதி.ஷோபா, திரு.ஹர்ஷ்வர்தன் உள்ளிட்ட பல்வேறு துறை அமைச்சர்களும், பல்வேறு மாநில அமைச்சர்களும், அரசியல் பிரமுகர்களும் மற்றும் திரைத்துறை பிரபலங்களான கங்கனா ரனாவத், பாடலாசிரியர் பிரசூன் ஜோஷி,, பாரம்பரிய நடனக்கலைஞர் மான்சிங், நடிகர் சந்தானம், நடிகை குஷ்பு உள்ளிட்ட பலரும் தங்களது ட்விட்டர் பக்கங்களில் வாழ்த்துக்களை தெரிவித்திருந்தனர்.
பிரபலங்கள் மட்டுமல்லாமல், ஈஷா தன்னார்வலலர்கள் பாதுமக்கள் என லட்ட்சக்கணக்கான மக்கள் டிவிட்டரில் #HappyBirthdaySadhguru #RiverRevitalizationDay ஆகிய டேக் உடன் சத்குருவை வாழ்த்தி ட்வீட் செய்தனர். இது தேசிய அளவில் முதல் இடத்தில் ட்ரெண்டிங் ஆனது.
30 வருடங்களுக்கு முன்பு ஈஷா யோகாவைத் துவங்கி யோகாவை உடல், மன, ஆன்மீக நலத்திற்கான கருவியாக வெகுஜன மக்களுக்கு தொடர்ந்து கொண்டு சென்று கொண்டிருப்பவர் சத்குரு.மேலும் சமூக பங்களிப்பாக 'கிராம புத்துணர்வு இயக்கம்', கிராமப்புற ஏழை குழந்தைகளின் கல்வி மேம்பட 'ஈஷா வித்யா பள்ளிகள்', சூழலியல் மேம்பட்டிற்கான 'பசுமைக்கரங்கள் இயக்கம்',உழவர் நலனுக்காகவும் விவசாயிகளின் பொருளாதார மேம்பாட்டிற்காகவும் 'உழவன் உற்பத்தியாளர் நிறுவனங்கள்' மற்றும் 'இயற்கை விவசாய இயக்கம்', நதிகளை மீட்டெடுக்க 'நதிகளை மீட்போம்' மற்றும் 'காவிரி கூக்குரல் இயக்கம்' என சத்குருவின் தொலைநோக்குப்பார்வையில் நிகழ்ந்து கொண்டிருக்கும் சமூக நலனுக்காக பல்வெறு திட்டங்களால் உலகெங்கும் கோடிக்கணக்கானோர் பயனமடந்து வருகின்றனர். சத்குரு அவர்கள் தனது ஆன்மீக மற்றும் சமூக பணிகளுக்காக இந்திய நாட்டின் உயரிய விருதான பத்ம விபூஷன் விருதினை கடந்த 2017ம் ஆண்டு பெற்றார்.
ஒரே நாளில் அதிக மரங்களை நட்டு கின்னஸ் சாதனை, நதிகளை மீட்பதற்கான இந்தியா முழுக்க மிகப்பெரிய விழிப்புணர்வு பயணம், சமீபத்தில் மண் காப்போபாம் இயக்கத்திற்காக உலக நாடுகளைக் கடந்து 100 நாள் பைக் பயணம் என உலக மக்களின் கவனத்தை சூழலியல் மேம்பாட்டின் பக்கம் திருப்பியவர்.
இவரின் பேச்சுக்களை 100 கோடிக்கும் அதிகமான மக்கள் பார்ப்பதாக புள்ளிவிபரங்கள் சொல்கின்றன. இவர் முன்னெடுத்துள்ள 'மண் காப்போம்' இயக்கம் 300 கோடிக்கும் அதிகமானோரை சென்றடைந்துள்ளது. ஒரு சமூக நலன் சார்ந்த விஷயம் ஒருமித்த குரலுடன் இத்தனை பெரிய ஆதரதவாடு நிகழ்வது குறிப்பிடத்தக்கது.