Kathir News
Begin typing your search above and press return to search.

நடிகர் ரஜினிகாந்த் அரசியல் வருகை குறித்து பாஜக மூத்த தலைவர் பொன்.ராதாகிருஷ்ணன் முக்கியக் கருத்து

நடிகர் ரஜினிகாந்த் அரசியல் வருகை குறித்து பாஜக மூத்த தலைவர் பொன்.ராதாகிருஷ்ணன் முக்கியக் கருத்து

நடிகர் ரஜினிகாந்த் அரசியல் வருகை குறித்து பாஜக மூத்த தலைவர் பொன்.ராதாகிருஷ்ணன் முக்கியக் கருத்து

Kathir WebdeskBy : Kathir Webdesk

  |  24 Oct 2019 1:42 AM GMT


தமிழக பாஜக மூத்த தலைவர் ரஜினிகாந்த் கட்சி தொடங்கினால்தான் தான் வரவேற்பதாகக் கூறிய பாஜக மூத்த தலைவரும், முன்னாள் அமைச்சருமான பொன்.ராதாகிருஷ்ணன் அதே சமயம் அவர் பாஜகவில் சேர வேண்டும் என்பதுதான் தன தனிப்பட்ட விருப்பம் என்றார்.


புதுக் கோட்டையில் நடைபெற்ற பத்திரிக்கையாளர் சந்திப்பின் போது பேசிய பொன்.இராதகிருஷ்ணன் "ரஜினிகாந்த் ஒரு அரசியல் கட்சியைத் தொடங்குவார் என்று சொன்னால், நிச்சயமாக நான் மகிழ்ச்சி அடைவேன், பாராட்டு தெரிவிப்பேன். ஆனால், என்னுடைய விருப்பம், ரஜினிகாந்த் பாஜகவில் சேர வேண்டும் என விரும்புகிறேன்.


இதனை நான் ஆரம்பத்தில் இருந்தே சொல்லிக் கொண்டிருக்கிறேன். அவரை இன்றைக்கு மட்டும் அழைக்கவில்லை. தமிழ்நாட்டில் யாராக இருந்தாலும் பாஜகவில் சேருங்கள் என்றுதான் சொல்வேன்," என பொன்.ராதாகிருஷ்ணன் தெரிவித்தார்


Next Story
கதிர் தொகுப்பு
Trending News