மோசமான திட்டமிடல், மாநில மின்வாரியத்தால் நிலக்கரி டெண்டர் தாமதம் - தமிழக மின்வெட்டு காரணகர்த்தா யார்?
தமிழ்நாட்டில் நிலவும் மின்பற்றாக்குறை, மாநிலத்தின் மின் உற்பத்தி மற்றும் விநியோகப் பயன்பாட்டில் உள்ள மெத்தனப் போக்கால் தமிழகத்தில் மின்வெட்டு அதிகம் நிலவுகிறது என Moneycontrol தெரிவித்துள்ளது.
By : Mohan Raj
தமிழ்நாட்டில் நிலவும் மின்பற்றாக்குறை, மாநிலத்தின் மின் உற்பத்தி மற்றும் விநியோகப் பயன்பாட்டில் உள்ள மெத்தனப் போக்கால் தமிழகத்தில் மின்வெட்டு அதிகம் நிலவுகிறது என Moneycontrol தெரிவித்துள்ளது.
கடந்த ஏப்ரல் 22'ம் தேதி வெள்ளிக்கிழமை அன்று ஏற்பட்ட தமிழகத்தில் ஏற்பட்ட கடுமையான மின்வெட்டினால் எதிர்க்கட்சிகள் மற்றும் நுகர்வோரின் கடும் கண்டனத்திற்கு உள்ளான முதல்வர் ஸ்டாலின், பிரதமர் நரேந்திர மோடிக்கு கடிதம் எழுதி அதில் மாநிலத்தில் நிலவும் மின் பற்றாக்குறைக்கு இந்திய ரயில்வே மீது குற்றம் சாட்டினார்.
அதில் அவர் குறிப்பிட்டதாக, "கோடைகால மின் தேவையை பூர்த்தி செய்ய நிலக்கரி உற்பத்தி போதுமானது, ரயில்வேயின் ரேக்குகள் பற்றாக்குறை காரணமாக துறைமுகங்களுக்கு கொண்டு செல்லப்படவில்லை" என்று ஸ்டாலின் கடிதத்தில் கூறியதாக Moneycontrol தெரிவித்துள்ளது.
இருப்பினும், ரயில்வே ரேக்குகளின் பற்றாக்குறை ஒரு தீராத பிரச்சனையாக கூறப்படுகிறது. இப்பிரச்சனையைத் தவிர்க்க, 2011-2016 ஆம் ஆண்டு மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் ஆட்சியின் போது, போதுமான நிலக்கரி விநியோகத்தை உறுதி செய்யும் செயல்முறையை தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மானக் கழகம் லிமிடெட் (TANGEDCO) கொண்டு வந்தது.
உள்நாட்டில் 72,000 மெட்ரிக் டன் தேவைக்கு 50,000 மெட்ரிக் டன் (MT) மட்டுமே வழங்கப்படுவதால், பற்றாக்குறையை சமாளிக்க தமிழகம் நிலக்கரியை இறக்குமதி செய்ய வேண்டும் என அரசு நடத்தும் மின் உற்பத்தி நிலையங்கள் ஒரு முறையை பயன்படுத்துகின்றன அந்த முறைப்படி 30 சதவிகிதம் இறக்குமதி செய்யப்பட்ட நிலக்கரியுடன் 70 சதவிகித உள்நாட்டு நிலக்கரி கலக்கப்படுகிறது.
TANGEDCO இந்தோனேசியாவிலிருந்து நிலக்கரியை இறக்குமதி செய்வதற்கான டெண்டரை ஒவ்வொரு ஆண்டும் பிப்ரவரி மாதத்திற்குள் வெளியிடுகிறது. ஆனால் இந்த ஆண்டு டெண்டர் மார்ச் 26 அன்று மட்டுமே வெளியிடப்பட்டது, இது வழக்கமான விதிமுறைகளுடன் ஒப்பிடும்போது கிட்டத்தட்ட இரண்டு மாதங்கள் தாமதமாகும். தமிழக அரசு இரண்டு மாதங்கள் தாமதமாக டெண்டர் அனுப்பியது.
சில ஆண்டுகளில், உலகளாவிய நிலக்கரி விலை நிலையற்றதாக இருந்தால், அடுத்த ஆண்டு விநியோகத்திற்கான டெண்டர்கள் நவம்பரில் வெளியிடப்படும், என Moneycontrol தெரிவித்தது குறிப்பிடத்தக்கது. "சர்வதேச சந்தைகளில் நிலக்கரி விலை உயர்ந்து மிக அதிகமாக இருந்தது. ஒரு பெரிய டெண்டருக்குப் போகாமல் அதனை மட்டும் நம்பி இருக்காமல் விலை ஏற்ற இறக்கமாக இருப்பதால், ஒவ்வொரு காலாண்டிற்கும் ஒரு முறையாவது பல சிறிய டெண்டர்களுக்குப் மின்வாரிய முறைப்படி போவோம், ஏனென்றால் நிலக்கரி விலைப் போக்குகள் கணிக்க முடியாதவை," என்று TANGEDCO மூத்த அதிகாரி ஒருவர் அறிக்கையில் குறிப்பிட்டு பேசியுள்ளார்.
நிலக்கரி ரசீதுக்கான டெண்டர் விடுவதற்கு ஒன்றரை முதல் மூன்று மாதங்கள் வரை ஆகும். எனவே, இந்த முறை டெண்டர் விடுவதில் தாமதம் ஏற்பட்டுள்ளதால், தற்போதைய மின் நெருக்கடிக்கு காரணமாக இருக்கலாம். "இறக்குமதி செய்யப்பட்ட நிலக்கரிக்கு மார்ச் இறுதியில் டெண்டர்கள் கோருவது மிகவும் தாமதமானது" என்று TANGEDCO இன் முன்னாள் உயர் அதிகாரி அறிக்கையில் கூறியதும் குறிப்பிடத்தக்கது.
"இறக்குமதியாளர்களுக்கு பணம் செலுத்துவது எப்போதுமே கடனில் இருக்கும், முன்கூட்டியே அல்ல என்பதால் பணப்புழக்கத்திற்கும் இதற்கும் எந்த தொடர்பும் இல்லை. ஆனால் ஆம், சர்வதேச நிலக்கரி விலை தற்போதைய சூழ்நிலையில், உள்நாட்டு நிலக்கரியை விட மிகவும் விலை உயர்ந்ததாக இருக்கும். நிச்சயமாக, கடந்த ஆண்டே டெண்டர்கள் அழைக்கப்பட்டு தீர்வு காணப்பட்டிருந்தால் அது மலிவாக இருந்திருக்கலாம், மேலும் நமக்கு மலிவாகவும் கிடைத்திருக்கலாம்" என்று முன்னாள் TANGEDCO நிர்வாகி கூறினார்.
"குளிர்கால மாதங்களில் உங்கள் உள்நாட்டு நிலக்கரி இருப்பை 10-15 நாட்களுக்கு கட்டமைக்க வேண்டும், நவம்பரில் முன்கூட்டியே மார்ச் முதல் மே வரையிலான குறுகிய கால ஒப்பந்தங்களில் ஈடுபட வேண்டும், அதேபோல், நவம்பர் மாதத்தில் இறக்குமதி செய்யப்பட்ட நிலக்கரி டெண்டர்களை கோர வேண்டும். தற்போதைய நெருக்கடி மோசமான திட்டமிடலின் விளைவு என்று தோன்றுகிறது, "என்று அந்த TANGEDCO அதிகாரி மேலும் கூறியதும் இங்கே குறிப்பிடத்தக்கது.
கோடைகால தேவை சுமார் 15000-16000 மெகாவாட்டாக உயர்ந்துள்ளது அதன்படி TANGEDCO ஏற்கனவே ரூ.1.34 லட்சம் கோடி கடனைக் கையாள்வதால் முன்கூட்டியே திட்டமிட வேண்டும். முன்கூட்டியே திட்டமிடாமல் அரசிலுக்காக மத்திய அரசை குறை கூறுவதால் பாதிக்கப்படப்போவது மக்கள் மட்டுமல்ல ஆட்சியாளர்களும் கூட!