Kathir News
Begin typing your search above and press return to search.

கேரளா: மருமகள் முஸ்லிம் சமூகம், பூரக்கலி கலைஞருக்கு கோவில்களில் செல்ல தடை!

மருமகள் உடைய மத பாகுபாடு காரணமாக பூரக்கலி கலைஞருக்கு கோவில்களில் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது.

கேரளா: மருமகள் முஸ்லிம் சமூகம், பூரக்கலி கலைஞருக்கு கோவில்களில் செல்ல தடை!
X

Bharathi LathaBy : Bharathi Latha

  |  19 March 2022 1:56 AM GMT

கேரளாவில் திருவிழாக்களில் காணப்படும் முக்கியமான கலையாக பூரக்கலி கண்டறியப்படுகிறது. கேரளாவில் கண்ணூர் மாவட்டம் பையனூர் அருகே உள்ள கரிவெள்ளூர் குனியன் பரம்பத் பகவதி கோவில் கமிட்டியின் முடிவிற்கு முக்கிய பூரக்கலி கலைஞரை மாற்றவும், அவரது மகன் இஸ்லாமிய பெண்ணை திருமணம் செய்ததால் கோவில் திருவிழாவில் பங்கேற்க தடை விதித்ததற்கும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது. இந்த ஒரு சர்ச்சையான விஷயம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.


வினோத் கடந்த 38 ஆண்டுகளாக வடக்கு மலபாரில் உள்ள பகவதி கோவில்களில் பூரம் திருவிழாவின் போது ஆண்களின் பாரம்பரிய நடனமான பூரக்கலியை நிகழ்த்தி வருகிறார். இவரது மகனுக்கு நான்கு ஆண்டுகளுக்கு முன் திருமணம் நடந்தாலும், இன்னும் பல கோவில்களில் கலை நிகழ்ச்சிகளை நடத்தி வருகிறார். ஆனால், கரிவேலூரில் உள்ள இரண்டு கோவில்கள் அவருக்கு நிகழ்ச்சி நடத்தும் வாய்ப்பை மறுத்தது இதுவே முதல் முறை. கடந்த ஆண்டு, கரிவெள்ளூர் ஸ்ரீ வாணியில்லம் சோமேஸ்வரி கோயில் நிர்வாகத்தினர் அவருக்கு நிகழ்ச்சி நடத்த அனுமதி மறுத்தனர்.


"இந்து அல்லாத என் மருமகள் என் வீட்டில் தங்கியிருப்பதைக் காரணம் காட்டி நான் சடங்கு நடனம் ஆட முடியாது என்று கோயில் கமிட்டி உறுப்பினர்கள் என்னிடம் தெரிவித்தனர். வேறொரு வீட்டிற்கு மாறுங்கள் அல்லது என் மருமகளை வேறு இடத்திற்கு மாற்றச் சொன்னார்கள். ஆனால் இந்த முன்மொழிவுகளை என்னால் ஏற்க முடியாது" என்று அவர் தெரிவித்தார். எவ்வாறாயினும், கோவில் குழு உறுப்பினர் வி.சசிதரன் கூறுகையில், இந்த விவகாரம் வகுப்புவாத கோணத்தில் ஊதி பெரிதாக்கப்பட்டது. இது ஒரு சமுதாயக் கோயில். திரு.வினோத்தை மாற்றுவதற்கான முடிவு கமிட்டி உறுப்பினர்களால் எடுக்கப்பட்டது" என்று அவர் மேலும் கூறினார்.

Input & Image courtesy:The Hindu

Next Story
கதிர் தொகுப்பு
Trending News