Kathir News
Begin typing your search above and press return to search.

"பாதிரியார்கள், கன்னியாஸ்திரீகள் கூட ஆபாச வீடியோ பாக்குறாங்க" - போப் ஆண்டவர் வேதனை!

பாதிரியார்கள், கன்னியாஸ்திரீகள் கூட ஆபாச வீடியோ பாக்குறாங்க - போப் ஆண்டவர் வேதனை!
X

Kathir WebdeskBy : Kathir Webdesk

  |  29 Oct 2022 3:35 AM GMT

போப் பிரான்ஸிஸிடம் கேள்வி

மொபைல் மற்றும் இணையதள பயன்பாடு குறித்து நடந்த கருத்தரங்கில் போப் பிரான்ஸிஸ் பேசினார். அவரிடம் கேட்கப்பட்ட இது குறித்து கேள்வி கேட்கப்பட்டது. இணைய உலகில் உலவும் ஆபாசப் படங்களால் தீமையும் அபாயமுமே விளைகிறது.

சாமானியர்கள் மட்டுமல்லாது பாதிரியார்கள், கன்னியாஸ்திரிகள் கூட ஆபாச தளங்களை பார்க்கும் பழக்கத்தை கொண்டிருக்கிறார்கள். செல்போன், இணையம் போன்றவற்ற நவீன தொழில்நுட்ப சாதனங்கள் வாழ்க்கையில் நன்மையை விளைவிப்பதற்காக மட்டுமே பயன்படுத்த வேண்டும்.

ஆபாசம் பார்த்தால் சாத்தான்

பாதிரியார்கள், கன்னியாஸ்திரிகள் ஆபாச படங்களை பார்ப்பதற்கு எதிராக தொடர்ந்து குரல் எழுப்பி வருகிறேன். ஆபாசம் பார்ப்பதால் மனதில் சாத்தான் குடி கொள்ளும். ஆபாசம் குறித்து பேசுவதற்காக என்னை மன்னியுங்கள். ஆனால் இப்படியான வீடியோக்கள் பார்ப்பதால் அதிலிருந்து கெட்ட சக்திகளான சாத்தான் வெளியே வருகிறது. பலரது இதயத்தை சலனப்பட வைக்கிறது.

அரசுத்தரப்பில் இருந்து பல நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. இருந்தாலும் யாரும் செல்போனில் ஆபாச படங்களை வைத்திருக்க கூடாது. அப்போதுதான் சலனமில்லாமல் வாழ முடியும் என்றார்.

Input From: PuthiyaThalaimurai

Next Story
கதிர் தொகுப்பு
Trending News