அஞ்சலக கணக்குகளில் மோசடி - எவ்வாறு எச்சரிக்கையுடன் இருப்பது?
அஞ்சலக திட்டங்களில் நடைபெறும் மோசடி கும்பலின் தொடர்ச்சியான செயல்கள், எச்சரிக்கை தேவை.
By : Bharathi Latha
இந்தியாவைப் பொருத்தவரை பெரும்பாலான வங்கிகளில் மோசடி பேய்கள் என்பது தொடர்ச்சியான வண்ணம் நடைபெற்று வருகிறது. குறிப்பாக ஏடிஎம், டெபிட் கார்டு, கிரெடிட் கார்டு போன்றவற்றை பயன்படுத்தி பல்வேறு மோசடி கும்பல்களை தங்களுடைய கைவரிசை காட்டி வருகிறார்கள். ஆனால் அஞ்சல் அலுவலகங்களில் உள்ள திட்டங்களில் இத்தகைய நிலைமை தற்போது ஏற்பட்டுள்ளது. அஞ்சல் அலுவலகங்களில் பல்வேறு திட்டங்களில் ஈடுபட்டுள்ள இது குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தி இருப்பது அவசியம்.
சிறு குழந்தைகள் முதல் மூத்த குடிமக்களுக்கு வரை பல்வேறு சேமிப்பு திட்டங்கள் அஞ்சல் அலுவலகங்களில் தற்போது வரை நடைமுறையில் இருந்து வருகிறது. மேலும் பெரும்பாலான மக்கள் அஞ்சலகங்களில் தங்களுடைய சேமிப்பு திட்டத்தின் அங்கமாக வைத்துள்ளார்கள். திம்பு மட்டுமல்லாமல் வட்டி விகிதம் குறைப்பு வருமான வரி சேவை குறைப்பு போன்ற பல்வேறு சேவைகளும் நமக்கு கிடைத்து வருகிறது.
எனவே நீங்கள் சேமிக்கும் பணத்திற்கு நீங்கள் தான் பாதுகாப்பாக இருக்க வேண்டும். உங்களுடைய தனிப்பட்ட தகவல்களை மூன்றாம் நபரிடம் பகிர வேண்டாம் என்று இந்திய தபால் துறை எச்சரிக்கையும் விடுத்துள்ளது. சமீப காலமாக ஆன்லைன் மோசடி சம்பவங்கள் அதிகரித்து வருகின்றன. இந்த மோசடி கும்பல் போஸ்ட் ஆபீஸ் வாடிக்கையாளர்களிடம் கைவரிசையை காட்டிவிட கூடாது என்பதில் தபால் துறை தெளிவாக உள்ளது. மேலும் சமூக வலைத்தளங்களான வாட்ஸ் அப்பின் மூலம் பல்வேறு link-களும் தற்பொழுது ஆக்டிவேட் ஆக உள்ளது அவற்றை பயன்படுத்த வேண்டாம் என்றும் தபால் துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Input & Image courtesy:News 18