Kathir News
Begin typing your search above and press return to search.

அஞ்சலக சேமிப்பு கணக்கு - வீட்டிலிருந்தபடியே தொடங்குவது எப்படி?

போஸ்ட் ஆபீஸ் சேமிப்பு அக்கௌன்ட் வீட்டில் இருந்தபடியே தொடங்குவது எப்படி?

அஞ்சலக சேமிப்பு கணக்கு - வீட்டிலிருந்தபடியே தொடங்குவது எப்படி?
X

Bharathi LathaBy : Bharathi Latha

  |  24 April 2022 2:14 AM GMT

சமீபகாலமாக பெருமளவில் மக்கள் போஸ்ட் ஆபீஸில் சேமிக்கும் பழக்கத்தை கொண்டுள்ளார்கள். பெரும்பாலான நடுத்தர மக்களும் இந்த ஒரு சேவிங் அக்கவுன்ட் தொடங்குகின்றனர். ஆனால் தோற்றத்தல் எப்பொழுதும் மக்கள் கூட்டம் அதிகமாக இருக்கும் ஒரு இடமாக இருக்கிறது. எப்படி வங்கிகளில் கூட்டம் அதிகமாக காணப்படும் அதே மாதிரி போஸ்ட் ஆபீஸ் செய்யும் மக்கள் கூட்டம் அதிகமாகவே காணப்படுகிறது. இதன் காரணமாக படித்த மக்கள் கூட போஸ்ட் ஆபீஸ்க்கு செல்வதற்கு தயக்கம் காட்டுகிறார்கள். எனவே வீடுகளில் இருந்து டிஜிட்டல் மூலமாக post-office அக்கவுண்ட்டை தொடங்கலாம் என்பது குறித்து தற்போது பார்ப்போம்.


இந்த டிஜிட்டல் உலகில் வங்கி கணக்கில் பெரும்பாலான சேவைகளை, அஞ்சலக கணக்கிலும் பெற முடியும். இதை எல்லா வாடிக்கையாளர்களும் எளிதில் பெறலாம். குறிப்பாக ஆன்லைன் பேங்கிங், மொபைல் பேங்கிங் வசதி எல்லாமே போஸ்ட் ஆபீஸ் சேவையிலும் வந்து விட்டது. அஞ்சலகங்களில் தற்பொழுது பல்வேறு திட்டங்கள் நடைமுறையில் உள்ளன. குறிப்பாக பெண் குழந்தைகள் முதல் மூத்த குடிமக்கள் சேமிப்பு கணக்குகள் வரை பல்வேறு திட்டங்கள் அமலில் உள்ளது. இவற்றை நீங்கள் வீட்டில் இருந்து தொடங்கும் மூலமாகவும் செயல்படுத்த முடியும்.


இவ்வளவு போஸ்ட் ஆபீஸ் சேமிப்பு கணக்கை நீங்களும் தொடங்க ஆன்லைனில் எளிமையாக இதை செய்யலாம். இதற்கு நீங்கள் முதலில் IPPB ஆப்பை டவுன்லோட் செய்து கொள்ள வேண்டும். பின்பு அதில் வரும் அக்கவுண்ட் ஓப்பனிங் ஆப்சனை கிளிக் செய்யுங்கள். அதில் பான் எண் மற்றும் ஆதார் நம்பரை கொடுத்து அப்டேட் கொடுங்கள். மேலும் ஆதார் கார்டில் கொடுக்கப்பட்டுள்ள பெண்ணிற்கு தற்போது ஒரு OTP உடனே ஆதார் எண்ணில் OTP வரும். இது தவிர கல்வித் தகுதி, முகவரி, நாமினி விவரம் உள்ளிட்டவற்றை கொடுக்க வேண்டும். வேண்டிய விவரங்களை கொடுத்த பிறகு சப்மிட் செய்யவும். இந்த அனைத்து விவரங்களையும் சரியாக கொடுத்த பின்னர், உங்களது அஞ்சல் கணக்கு தொடங்கப்பட்டு விடும். மேலும் இந்தப் பழங்களை கொடுப்பதற்கு முன் உங்கள் பான் கார்டு ஆதார் லின்க் செய்ய வேண்டும் என்பதும் குறிப்பிடத்தக்கது.

Input & Image courtesy: Twitter source

Next Story
கதிர் தொகுப்பு
Trending News