ரஜினி கட்சி தொடங்கினால் நான் தான் துணை முதல்வர் - காமெடி நடிகர்!
ரஜினி கட்சி தொடங்கினால் நான் தான் துணை முதல்வர் - காமெடி நடிகர்!

சிவகாமி என்ற புதிய படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் காமெடி நடிகர் பவர் ஸ்டார் நடிக்கிறார். இந்த படத்தின் இசை வெளியீட்டு விழா சமீபத்தில் நடைபெற்றது. அதில் பேசிய பவர் ஸ்டார் சீனிவாசன் ரஜினிகாந்த் அவர்களுக்கு ஒரு வேண்டுகோள் என்றார்.
அது என்னவென்றால்: அவர் விரைவில் கட்சி ஆரம்பிக்க வேண்டும். அவர் முதல்வர் என்றால் நான் துணை முதல்வர் என்று காமெடி நடிகர் பவர்ஸ்டார் கூறினார். மேலும் அவர் என்னையும் கட்சியில் சேர்த்துக் கொள்ள வேண்டும். அவர் அப்படி செய்ய வில்லை என்றால். நான் புதிதாக கட்சி தொடங்குவேன். அவருக்கு வேண்டும் என்றால் என்னுடைய கட்சியில் சேரலாம் என்று காமெடியாக பேசினார்.
நான் சினிமாவில் நடித்ததன் மூலம் எனக்கு பல சோதனைகள் மற்றும் பணம் இழப்பு போன்றவை இருந்தாலும் சின்ன கதாபாத்திரத்தில் நடித்தால் கூட உலகம் முழுவதும் பிரபலமாகலாம் என்பதால் தான் இந்த துறையில் தொடர்ந்து இருக்கிறேன் என்று கூறினார்.