Kathir News
Begin typing your search above and press return to search.

25 ஆண்டுகளுக்குப் பிறகு தைவானில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம்- பிரதமர் மோடி இரங்கல்!

25 ஆண்டுகளுக்குப் பிறகு தைவானில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டு கட்டிடங்கள் இடிந்து உயிரிழப்பு ஏற்பட்டுள்ளது.

25 ஆண்டுகளுக்குப் பிறகு தைவானில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம்- பிரதமர் மோடி இரங்கல்!

KarthigaBy : Karthiga

  |  4 April 2024 10:42 AM GMT

தைவானில் 7.4 ரிக்ட்டர் அளவு கொண்ட நிலநடுக்கம் நேற்று ஏற்பட்டது .அந்த தீவு கடந்த 25 ஆண்டுகளில் சந்தித்திராத மிக சக்தி வாய்ந்த இந்த நிலநடுக்கத்தில் இதுவரை 10 பேர் உயிரிழந்துள்ளனர். தைவானின் தெற்கு கடலோர நகரான ஹுவாலியனுக்கு சுமார் 18 கிலோமீட்டர் தெற்கு - தென்மேற்கே 34.8 கிலோ மீட்டர் ஆழத்தில் நேற்று காலை 7.58 மணிக்கு நிலநடுக்கம் ஏற்பட்டது ரிக்டர் அளவுகோலில் இந்த நிலநடுக்கம் 7.4 அலகுகளாய் பதிவானதாக அமெரிக்க புவியியல் ஆய்வு மையமும் 7.2 அலகுகளாக பதிவானதாக தைவானின் மத்திய காலநிலை ஆய்வு நிறுவனமும் தெரிவித்தன.


இந்த நிலநடுக்கத்தைத் தொடர்ந்து 44 பின் அதிர்வுகள் ஏற்பட்டன. அவை ரிக்டர் அளவுகோலில் அதிகபட்சமாக 6.4 அலகுகள் வரை பதிவாகின. தலைநகர் தைபேக்கு வெறும் 150 கிலோ மீட்டர் தொலைவில் ஏற்பட்ட இந்த நிலநடுக்கத்தால் ஏராளமான கட்டிடங்கள் சாய்ந்தன. பல வீடுகள் குலுங்கியதால் பொதுமக்கள் அச்சத்துடன் வீதியுடன் அவசரமாக வெளியேறினார். தைபே நகரில் பழைய கட்டடங்களில் ஒட்டப்பட்டு இருந்த ஓடுகள் உடைந்து விழுந்தன. பள்ளிகளில் இருந்த மாணவர்கள் அவசரமாக வெளியேற்றப்பட்டனர் .

இந்த நிலநடுக்கத்தின் பாதிப்புகளால் இதுவரை 10 பேர் உயிரிழந்தாகவும் 963 பேர் காயமடைந்ததாகவும் சுமார் 152 பேர் இடுப்பாடுகளை சிக்கியிருப்பதாகவும் அவர்கள் கூறினார். தைவானில் 25 ஆண்டுகளுக்கு முன்னர் ஏற்பட்ட நிலநடுக்கத்துக்கு பிந்தைய மிக சக்தி வாய்ந்த நிலநடுக்கம் இதுவாகும்.அந்த தீவின் ஜிச்சி பகுதியில் 199 செப்டம்பரில் 33 கிலோ மீட்டர் ஆழத்தில் ஏற்பட்ட அந்த நிலநடுக்கம் ரிக்ட்டர் அளவுகோலில் 7.7 அலகுகள் பதிவானது. இந்த நிலநடுக்கத்தால் 2,415 பேர் உயிரிழந்தனர். பிலிப்பின்ஸ் கடல் புவி தகடும் யுரேசிய புவி தகடும் ஒன்றுடன் ஒன்று உராயும் பகுதியில் அமைந்துள்ளதால் தைவானில் அடிக்கடி சக்தி வாய்ந்த நிலநடுக்ககள் ஏற்படுகின்றன .

தற்போது நிலநடுக்கம் மையம் கொண்டிருந்த பகுதியில் இந்த இரு புவி தகடுகளும் ஆண்டுக்கு 75 மில்லி மீட்டர் எதிரெதிராக நகர்கின்றன. இதுகுறித்து பிரதமர் மோடி தனது எக்ஸ் பக்கத்தில் வெளியிட்ட பதிவில் தைவானில் நிலநடுக்கத்தால் இடிந்து விழுந்த கட்டிட இடுபாடுகளில் சிக்கி உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு மோடி இரங்கல் தெரிவித்துள்ளார். காயமடைந்தவர்கள் விரைவில் குணமடைய வேண்டுகிறேன் என்று குறிப்பிட்டுள்ளார்.


SOURCE :Dinamani

Next Story
கதிர் தொகுப்பு
Trending News