Kathir News
Begin typing your search above and press return to search.

பிரதான் மந்திரி இ-பஸ் சேவை : தமிழகத்தில் தேர்வான 11 நகரங்கள்!

பிரதான் மந்திரி மின்சார பேருந்து வசதியைப் பெற தமிழகத்தில் 11 நகரங்கள் தேர்வாகியுள்ளன.

பிரதான் மந்திரி இ-பஸ் சேவை : தமிழகத்தில் தேர்வான 11 நகரங்கள்!

KarthigaBy : Karthiga

  |  20 Sep 2023 11:55 PM GMT

மத்திய அரசின் எலக்ட்ரிக் பஸ் எனப்படும் மின்சார பேருந்துகளை இயக்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது. சுற்றுச்சூழலை பாதுகாக்கும் வகையில் மத்திய அரசு இந்த முடிவை மேற்கொண்டது. கடந்த மாதம் 16ஆம் தேதி நடைபெற்ற மத்திய அமைச்சரவை கூட்டத்தில் பிரதான் மந்திரி இ-பஸ் சேவை எனப்படும் இந்தி திட்டத்திற்கு ஒப்புதல் அளிக்கப்பட்டது.


இந்த திட்டத்திற்காக 57 ஆயிரம் 613 கோடி ரூபாய் செலவில் 10 ஆயிரம் மின்சார குளிர்சாதன வசதி பேருந்துகளை நாட்டின் அதிக மக்கள் தொகை உள்ள நகரங்களில் பயன்படுத்த மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. அதன்படி 3 லட்சத்திற்கும் அதிகமான மக்கள் தொகை கொண்ட நகரங்களில் இந்த எலக்ட்ரிக் பேருந்து சேவைகளை நடைமுறைப்படுத்த மத்திய அரசு முடிவு செய்துள்ளது.


இந்த திட்டத்திற்காக முதற்கட்டமாக 9 மாநிலங்களில் அதிக மக்கள் தொகை கொண்ட 35 மாவட்டங்களில் 169 நகரங்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளன. இதில் தமிழகத்தில் 11 நகரங்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளன. அதன்பாடி 20 லட்சம் முதல் 40 லட்சம் மக்கள் தொகை கொண்ட மாநகரங்கனின் பட்டியலில் தமிழகத்தின் கோவை மாநகரம் இடம்பெற்றுள்ளது.


திருச்சி மற்றும் மதுரை மாநகரங்கள் 10 லட்சம் முதல் 20 லட்சம் வரை மக்கள் தொகை கொண்ட மாநகரங்களின் பட்டியலில் இடம்பெற்றுள்ளன. இதேபோல் ஈரோடு, சேலம், திருப்பூர் ஆகிய மாநகரங்கள் 5 லட்சம் முதல் 10 லட்சம் வரை மக்கள் தொகை கொண்ட மாநகரங்களின் பட்டியலில் சேர்க்கப்பட்டுள்ளன. 5 லட்சம் மற்றும் அதற்கு கீழ் மக்கள் தொகை கொண்ட பட்டியலில் அம்பத்தூர், ஆவடி, தூத்துக்குடி, நெல்லை, வேலூர் ஆகியவை இடம்பெற்றுள்ளன.


இந்த எலக்ட்ரிக் பேருந்து சேவை அரசு மற்றும் தனியார் பங்களிப்புடன் மேற்கொள்ளப்படவுள்ளது. இந்த திட்டத்திற்கு ஸ்டாண்டர்டு, மிடி மற்றும் மினி என மூன்று பிரிவுகளில் கிலோ மீட்டர் அடிப்படையில் மத்திய அரசு நிதி வழங்க உள்ளது. இந்த திட்டம் அடுத்த 10 ஆண்டுகள் அல்லது 2037 ஆம் ஆண்டு வரை மார்ச் மாதம் வரை பயன்பாட்டில் இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.


SOURCE :samayam.com

Next Story
கதிர் தொகுப்பு
Trending News