Kathir News
Begin typing your search above and press return to search.

காஷ்மீரில் அமைதியாக நடந்த பக்ரீத் தொழுகை: கல்லெறி இல்லை; போராட்டம் இல்லை; இனிப்பு வழங்கி பரஸ்பரம் வாழ்த்து !!

காஷ்மீரில் அமைதியாக நடந்த பக்ரீத் தொழுகை: கல்லெறி இல்லை; போராட்டம் இல்லை; இனிப்பு வழங்கி பரஸ்பரம் வாழ்த்து !!

காஷ்மீரில் அமைதியாக நடந்த பக்ரீத் தொழுகை: கல்லெறி இல்லை; போராட்டம் இல்லை; இனிப்பு வழங்கி பரஸ்பரம் வாழ்த்து !!
X

Kathir WebdeskBy : Kathir Webdesk

  |  12 Aug 2019 9:31 AM GMT



காஷ்மீர் மாநிலத்துக்கு வழங்கப்பட்ட சிறப்பு அந்தஸ்து நீக்கப்பட்டபின் முதன்முதலாக பக்ரீத் பண்டிகை அமைதியான முறையில் இன்று கொண்டாடப்பட்டது. எந்தவிதமான சிறு அசம்பாவித சப்பவங்ளுகம் அங்கு நடைபெறவில்லை. இனிப்புகள் வழங்கி பரஸ்பரம் வாழ்த்துக்களை பரிமாறிக்கொண்டனர்.


காஷ்மீர் மாநிலத்துக்கு தனி அந்தஸ்து வழங்கிய 370-வது சட்ட பிரிவு நீக்கப்பட்டது. மாநிலத்தை இரண்டாக பிரித்து ஜம்மு காஷ்மீர் சட்டப்பேரவையுடன் கூடிய யூனியன் பிரதேசமாகவும், லடாக் பகுதியை யூனியன் பிரதேசமாகவும் அறிவிக்கப்பட்டன.





இந்நிலையில் பக்ரீத்தை முன்னிட்டு கடந்த சனிக்கிழமை முதல் பாதுகாப்புப் படையினர் கட்டுப்பாடுகளை தளர்த்தினர். மக்கள் இயல்பாக சாலையில் நடமாடி தங்களுக்குத் தேவையான அத்தியாவசியப் பொருட்கள் மருந்துகள், உணவுப்பொருட்களைக் கடைகளில் வாங்கினர். மக்கள் தொழுகைக்கும் அருகில் உள்ள மசூதிக்குச் செல்ல அனுமதிக்கப்பட்டனர்.


இன்று காலை, காஷ்மீரின் பல்வேறு பகுதிகளில் உள்ள மசூதிகளில் தொழுகை மிகவும் அமைதியான முறையில் நடந்தது.




https://twitter.com/ANI/status/1160811282305572864



தொழுகை நடந்து முடிந்தபின் முஸ்லிம்கள், ஒருவருக்கு ஒருவர் கட்டித்தழுவி பரஸ்பரம் வாழ்த்துகளைத் தெரிவித்துக்கொண்டனர்.


பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்த அதிகாரிகள், முஸ்லிம்களுக்கு இனிப்புகளை வழங்கி பக்ரீத் திருநாள் வாழ்த்துக்களை தெரிவித்தனர். அவர்களும் அதிகாரிகளுக்கு இனிப்புகளை வழங்கி வாழ்த்துகளைத் தெரிவித்தனர்.




https://twitter.com/ANI/status/1160771655888777216



இருப்பினும், காஷ்மீர் பகுதியில் எந்தவிதமான அசம்பாவித சம்பவங்களும் நடந்துவிடக்கூடாது என்பதற்காக பதற்றமான பகுதிகளில் பாதுகாப்புப் படையினர் கண்காணித்து வந்தனர்.





இதுகுறித்து அதிகாரி ஒருவர் கூறுகையில், "ஜம்மு காஷ்மீரில் பாதுகாப்பு நிலவரங்கள் அடிக்கடி ஆய்வு செய்யப்பட்டு வருகிறது. எந்தவிதமான சிறு அசம்பாவித சம்பவங்களும் நேராமல் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. ஆனால், மக்கள் நடமாடுவதிலும், கடைகளுக்குச் சென்று பொருட்களையும், மருந்துகளையும் வாங்குவதிலும் எந்தவிதமான கட்டுப்பாடுகளையும் விதிக்கவில்லை. சில உணவுப்பொருட்கள் மக்களின் வீட்டுக்கே கிடைக்கும் வகையில் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. ஜம்மு காஷ்மீரில் அமைதியைக் கொண்டுவந்து, எந்தவிதமான போராட்டங்கள், விரும்பத்தகாத நிகழ்வுகள் நடக்காமல் தடுப்பதற்கு அரசு அதிகமான முக்கியத்துவம் அளிக்கும்" என்று தெரிவித்தார்.


வழக்கமாக இதுபோன்ற பண்டிகை நாட்களில் காஷ்மீர் பிரிவினைவாதிகளும், முஸ்லிம் பயங்கரவாதிகளின் ஆதரவாளர்களும் அப்பாவி முஸ்லிம்களை தூண்டிவிட்டு, மசூதிகளில் தொழுகையை முடிந்துக்கொண்டு வெளியே வந்தவுடன் ராணுவத்தின் மீது அவர்கள் கல்லெறிவார்கள். இது காஷ்மீரில் நீண்டகாலமாக நடபெற்று வந்துள்ளது.





ஆனால் இந்தமுறை முஸ்லிம்கள் எந்தவிதமான போராட்டமும் இன்றி, அசம்பாவித சம்பவங்களிலும் ஈடுபடாமல் அமைதியான முறையில் மசூதிக்கு வந்து தொழுகை நடத்தி சென்றுள்ளர்.


இன்று காஷ்மீரில் பெரும்பான்மையான முஸ்லிம்கள் மகிழ்ச்சியுடனேயே காணப்பட்டனர். முக்கியமாக பெண்கள் அதிக மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர். அவர்கள் பயங்கரவாதிகளின் மிரட்டலில் இருந்து விடுபட்டுள்ளதாகவே தெரிவித்தனர்.


Next Story
கதிர் தொகுப்பு
Trending News