Kathir News
Begin typing your search above and press return to search.

'நமக்கு நாமே' போல 'தனக்கு தானே' கருத்துக்கணிப்பு நடத்திய தி.மு.க - நாங்க தான் ஜெயிப்போம் என்று மல்லுக்கட்டும் உடன் பிறப்புகள்.!

'நமக்கு நாமே' போல 'தனக்கு தானே' கருத்துக்கணிப்பு நடத்திய தி.மு.க - நாங்க தான் ஜெயிப்போம் என்று மல்லுக்கட்டும் உடன் பிறப்புகள்.!

நமக்கு நாமே போல தனக்கு தானே கருத்துக்கணிப்பு நடத்திய தி.மு.க - நாங்க தான் ஜெயிப்போம் என்று மல்லுக்கட்டும் உடன் பிறப்புகள்.!
X

Kathir WebdeskBy : Kathir Webdesk

  |  16 Oct 2019 2:24 PM GMT


இடைதேர்தல் களநிலவரம் குறித்து தனக்கு சார்பான ஊடகம் மற்றும் அமைப்புகளை கொண்டு கருத்துக்கணிப்பு நடத்தி தாங்களே வெற்றி பெறுவோம் என்று திமுக மார்தட்டிக்கொண்டுள்ளது.


தமிழ்நாட்டில் நாங்குநேரி, விக்கிரவாண்டி ஆகிய சட்டமன்ற தொகுதிகளுக்கும், புதுச்சேரியில் காமராஜர் தொகுதிக்கும் இம்மாதம் 21 ஆம் தேதி இடைத்தேர்தல் நடைபெறுகிறது. மதச் சார்பற்ற கூட்டணி சார்பில் விக்கிரவாண்டியில் திமுகவும், நாங்குநேரி, காமராஜர் ஆகிய இரு தொகுதிகளில் காங்கிரஸ் கட்சியும் போட்டியிடுகிறது. தமிழகத்தில் அதிமுகவும், புதுச்சேரியில் அதன் கூட்டணியான என்ஆர் காங்கிரஸ் கட்சியும் போட்டியிடுகின்றன.


அதிமுக வேட்பாளர்களுக்காக முதலமைச்சரும், துணை முதல்வரும் பிரச்சாரத்தில் ஈடுபட்டனர். இந்நிலையில், இந்த மூன்று தொகுதிகளின் வெற்றி வாய்ப்பு குறித்து சென்னை லயோலா கல்லூரி முன்னாள் மாணவர்களைக் கொண்டு 2031 வாக்காளர்களிடம் கருத்து கேட்பு நடத்தப்பட்டுள்ளது.


இதன் முடிவுகளை சென்னையில் வெளியிட்டனர். அதில் நாங்குநேரி தொகுதியில் காங்கிரஸ் வேட்பாளர் ரூபி மனோகரனுக்கு 40.90 விழுக்காடு ஆதரவும், விக்கிரவாண்டியில் திமுகவின் புகழேந்திக்கு 43.60 விழுக்காடும், புதுச்சேரி காமராஜர் தொகுதியில் காங்கிரஸ் வேட்பாளர் ஜான்குமாருக்கு 44.60 விழுக்காடு ஆதரவும் கிடைத்துள்ளது. இந்த கருத்துக் கணிப்புகளின்படி மூன்று தொகுதிகளில் திமுக கூட்டணிக்கு வெற்றி வாய்ப்பு பிரகாசமாக இருக்கிறது என்று அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.


ஏற்கனவே லயோலா கல்லூரி முன்னாள் மாணவர்கள் அமைப்பு பலமுறை இதுபோன்ற கருத்துக்கணிப்புகளை வெளியிட்டு சர்ச்சையில் சிக்கியுள்ளது. எப்போதும் திமுக கூட்டணிக்கு சாதகமாக முடிவுகளை மட்டுமே வெளியிடுவதாக குற்றச்சாட்டு முன்வைக்கப்படுகிறது. வழக்கம் போல இந்த முறையும், திமுக கூட்டணிக்கு சாதகமாக முடிவுகளை வெளியிட்டு, தனது விஸ்வாசத்தை காட்டியுள்ளது.


Next Story
கதிர் தொகுப்பு
Trending News