பூர்வீகம் இந்தியாவா! அதிபர் ஜோ பைடன் பேச்சால் வெள்ளை மாளிகையில் சிரிப்பலை!
இதன் பின்னர் இந்தியாவில் 5 பைடன்கள் வசித்து வருவதாகவும் மறுநாள் காலையில் செய்தியாளர்கள் தன்னிடம் தெரிவித்தனர். ஏற்கனவே கிழக்கிந்திய தேயிலை கம்பெனியிலும் ஜார்ஜ் பைடன் என்ற பெயரிலும் கேப்டன் ஒருவர் பணியாற்றியுள்ளார்.
By : Thangavelu
அமெரிக்க சென்றுள்ள பிரதமர் மோடி இந்திய நேரப்படி நேற்று இரவு 9 மணியளவில் வெள்ளை மாளிகைக்குச் சென்றார். அப்போது பிரதமரை ஜோ பைடன் வரவேற்றார். இதன் பின்னர் இந்தியாவுடனான தன்னுடைய தொடர்பு பற்றி பேசினார். இதற்காக தனது பழைய நினைவு ஒன்றை நகைச்சுவையாக பேசினார். அவர் கூறியதாவது:
கடந்த 1972ம் ஆண்டு தான் 29வது வயதில் முதன் முறையாக செனட் சபைக்கு தேர்ந்தெடுக்கப்பட்ட போது, மும்பையில் இருந்து பைடன் என்ற பெயரில் எனக்கு வாழ்த்து செய்தி ஒருவர் அனுப்பியிருந்தார். ஆனால் அதனை நான் அப்படியே விட்டுவிட்டேன்.
இதன் பின்னர் இந்தியாவில் 5 பைடன்கள் வசித்து வருவதாகவும் மறுநாள் காலையில் செய்தியாளர்கள் தன்னிடம் தெரிவித்தனர். ஏற்கனவே கிழக்கிந்திய தேயிலை கம்பெனியிலும் ஜார்ஜ் பைடன் என்ற பெயரிலும் கேப்டன் ஒருவர் பணியாற்றியுள்ளார்.
அப்போது அவர் ஒரு அயர்லாந்துகாரர் என்பதை தான் ஒப்புக்கொள்ளவும் முடியவில்லை. எதுவாகினும் தான் இந்திய தொடர்பு குறித்து இன்னும் கண்டுபிடிக்க முடியவில்லை. இருந்தாலும் இந்த சந்திப்பின் நோக்கம் அனைத்தும் என்னுடைய இந்திய தொடர்பை கண்டுபிடிப்பதற்கு உதவுவதற்காகவே அமையும் என்றார். இதனிடையே பிரதமர் மோடி உட்பட பத்திரிகையாளர்கள் மற்றும் அதிகாரிகள் அனைவரும் பலமாக சிரித்தனர்.
இதனை தொடர்ந்து பிரதமர் மோடி மறுமொழியாக இந்தியாவில் உங்களின் குடும்ப பெயர் இருப்பது குறித்து நீங்கள் ஏற்கனவே என்னிடம் விரிவாக கூறியுள்ளீர்கள். எனவே இது பற்றிய ஆவணங்களை திரட்டுவதற்காக நான் நிகழ்த்திய தரவுகளின்படி சில ஆவணங்கள் உங்களுக்காக எடுத்து வந்துள்ளேன். இவை உங்களுக்கு உதவலாம் என்றார். இதனை கேட்ட பின்னர் அவையில் மீண்டும் சிரிப்பலை ஏற்படுத்தியது.
Source: Daily Thanthi
Image Courtesy: Prime Minister Modi Twiter