Kathir News
Begin typing your search above and press return to search.

சமஸ்கிருதத்தின் பெருமை: மொழி வேறுபாடில்லாமல் பிரதமர் மோடியின் கருத்து!

சமஸ்கிருதத்தின் பெருமை பற்றியும் பண்பாடு மற்றும் கலாச்சாரம் பற்றியும் பிரதமர் மோடி பெருமையாக கூறிய செய்திகள்.

சமஸ்கிருதத்தின் பெருமை: மொழி வேறுபாடில்லாமல் பிரதமர் மோடியின் கருத்து!
X

KarthigaBy : Karthiga

  |  28 Oct 2023 9:45 AM GMT

பிரதமர் மோடி நேற்று மத்திய பிரதேச மாநிலம் சித்திரக் கூடம் நகருக்கு சென்றார். புகழ்பெற்ற ரகுபீர் கோவிலில் சாமி தரிசனம் செய்தார். மறைந்த தொழிலதிபர் அரவிந்த் பாய் மபத்தால் நூற்றாண்டு விழா கொண்டாட்டத்தில் பங்கேற்றார். பின்னர் ஜகத்குரு ராம பத்ராச்சாரியார் துளசி மாடத்தில் நடந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டார். அங்க அவர் பேசியதாவது:-


நாட்டு மக்கள் ஒவ்வொருவரின் கனவுகளில் ஒன்றான ராமர் கோவிலை நனவாக்கியதில் ராம பத்ராச்சாரியார் முக்கிய பங்கு வகித்தார். கோர்ட்டிலும் கோர்ட்டுக்கு வெளியிலும் நிறைய பங்கு வகித்தார். ராமர் கோவில் விரைவில் தயாராக போகிறது. அதன் குடமுழுக்கு விழா அழைப்பிதழ் எனக்கு கிடைத்துள்ளது. ஜகத்குரு ராமபத்ராச்சாரியாவின் அறிவு ஒரு தேசிய சொத்து. தூய்மை இந்தியா திட்டத்திலும் அவரது பங்கு பாராட்டத்தக்கது . தூய்மை, சுகாதாரம் சுத்தமான கங்கை போன்ற தேசிய இலக்குகள் நிறைவேறி வருகின்றன.


நம் நாடு ஆயிரம் ஆண்டுகள் அடிமையாக இருந்தபோது நாட்டின் கலாச்சாரத்தையும் பாரம்பரியத்தையும் குலைக்கும் முயற்சிகள் நடந்தன. குறிப்பிட்ட தனிநபர்கள் முன்னெடுத்துச் சென்ற அடிமை மனப்பான்மை சமஸ்கிருதம் மீது பகைமை உணர்வுக்கு வழிவகுத்தது. சமஸ்கிருதம் பண்பாட்டு மொழி மட்டுமல்ல. நமது முன்னேற்றம் மற்றும் அடையாளத்திற்கான மொழி. அதன் முன்னேற்றத்திற்கு கடந்த 9 ஆண்டுகளில் ஏராளமான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டன. இவ்வாறு அவர் பேசினார்.

Next Story
கதிர் தொகுப்பு
Trending News