Kathir News
Begin typing your search above and press return to search.

தமிழனின் பெருமை - அமெரிக்க அதிபர் தேர்தலில் ராஜபாளையத்தை பூர்வீகமாகக் கொண்டவர் போட்டி!

அமெரிக்க அதிபர் தேர்தலில் இந்தியா வம்சாவளியைச் சேர்ந்த தமிழர் ஒருவர் போட்டியிடுகிறார்.

தமிழனின் பெருமை - அமெரிக்க அதிபர் தேர்தலில் ராஜபாளையத்தை பூர்வீகமாகக் கொண்டவர் போட்டி!
X

KarthigaBy : Karthiga

  |  19 Oct 2023 10:15 AM GMT

அமெரிக்க அதிபர் தேர்தல் அடுத்த ஆண்டு நவம்பர் மாதம் ஐந்தாம் தேதி நடக்க இருக்கிறது. இந்த தேர்தலில் ஜனநாயக கட்சி சார்பில் ஜோபைடன் மீண்டும் போட்டியில் உள்ளார். குடியரசு கட்சியின் வேட்பாளராக முன்னாள் அதிபர் டொனால்ட் டிரம்பும் களமிறங்க இருக்கிறார் . மேலும் அதிபர் தேர்தலில் போட்டியிட இந்திய வம்சாவளியைச் சேர்ந்த நிக்கி , கிருஷ்வர்தன், விவேக் ராமசாமி ஆகியோரும் விரும்பும் தெரிவித்து இருக்கின்றனர்.


இந்த மூன்று பேரும் குடியரசு கட்சியின் சார்பில் போட்டியிடப் போவதாக அறிவித்துள்ளனர். இவர்களில் யார் வேட்பாளர் என்பதை கட்சி உறுப்பினர்கள் தான் தேர்ந்தெடுக்க வேண்டும். இந்த நிலையில் இந்திய வம்சாவளி வரிசையில் நான்காவது நபராக சிவா அய்யாதுரை என்பவர் அமெரிக்க அதிபர் தேர்தலில் போட்டியிடப் போவதாக அறிவித்திருக்கிறார் . இந்திய வம்சாவளியைச் சேர்ந்த மற்ற 3 பேரும் குடியரசு கட்சி சார்பில் போட்டியிட விருப்பம் தெரிவித்திருந்த நிலையில் விஞ்ஞானியும் தொழில் அதிபருமான சிவா அய்யாதுரை சுயேட்சையாக போட்டியிட உள்ளார்.


தமிழ்நாட்டின் ராஜபாளையம் முகவூரை பூர்வீகமாகக் கொண்டவர் சிவா ஐயா துரை. இவருடைய தந்தை பெயர் வெள்ளையப்பன் தாயார் மீனாட்சி அம்மாள் சிவாஅய்யாதுறையின் தாயார் தூத்துக்குடி மாவட்டம் பரமன்குறிச்சியை சேர்ந்தவர். அமெரிக்க நடிகை பிரான் ட்ரெஷரை திருமணம் செய்த சிவா அய்யாதுரை அமெரிக்காவின் முன்னாள் அதிபர் டொனால்ட் ட்ரம்புக்கு மிகவும் நெருக்கமானவர். மின்னஞ்சல் முறையை கண்டுபிடித்தவர் இவர் என்பது குறிப்பிடத்தக்கது.


SOURCE :DAILY THANTHI

Next Story
கதிர் தொகுப்பு
Trending News