Kathir News
Begin typing your search above and press return to search.

பிரதமர் வீடு கட்டும் திட்டத்தில் லஞ்சம் - அம்பலப்படுத்திய கூலி தொழிலாளியை அவமானப்படுத்தியதால் தற்கொலை

திருவாரூர் அருகே பிரதமர் வீடு கட்டும் திட்டத்தில் லஞ்சம் வாங்கியது மட்டுமில்லாமல் ஊராட்சிமன்றத் தலைவர் தகாத வார்த்தைகளால் பேசியதால் கூலித்தொழிலாளி மனமுடைந்து பூச்சி மருந்து குடித்து தற்கொலை செய்து கொண்டுள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

பிரதமர் வீடு கட்டும் திட்டத்தில் லஞ்சம் - அம்பலப்படுத்திய கூலி தொழிலாளியை அவமானப்படுத்தியதால் தற்கொலை

Mohan RajBy : Mohan Raj

  |  25 Jun 2022 5:40 AM GMT

திருவாரூர் அருகே பிரதமர் வீடு கட்டும் திட்டத்தில் லஞ்சம் வாங்கியது மட்டுமில்லாமல் ஊராட்சிமன்றத் தலைவர் தகாத வார்த்தைகளால் பேசியதால் கூலித்தொழிலாளி மனமுடைந்து பூச்சி மருந்து குடித்து தற்கொலை செய்து கொண்டுள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.


திருவாரூர் மாவட்டம் கோட்டூர் அருகே உள்ள பள்ளிவர்த்தி ஊராட்சிக்கு உட்பட்ட பெரிய குருவாடி மாரியம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் கார்த்திகேயன், கூலி தொழிலாளியான இவர் மனைவி ராதா மற்றும் தனது மகன்கள் திலீப், சபாரி ஆகியோருடன் 19 ஆண்டுகளாக வசித்து வருகிறார்.

கடந்த 13-ஆம் தேதி பிரதமர் வீடு கட்டும் திட்டத்தின் கீழ் புதிய வீடு ஒன்று கட்டி குடி பெயர்த்துள்ளார். இதனையடுத்து 15ஆம் தேதி ஊராட்சி ஒன்றிய ஓவர்சியர் பிரதமர் வீடு கட்டும் திட்டத்தில் நடைபெற்ற பணிகள் குறித்து ஆய்வு மேற்கொண்டனர்.


அப்போது கார்த்திகேயன் மற்றும் அவரது உறவினர்கள் அந்த பகுதியில் இருந்துள்ளனர், மேலும் ஊராட்சி ஒன்றிய ஓவர்சியர் பள்ளிவர்த்தி ஊராட்சிக்கு மன்ற தலைவர் மாலாவின் கணவர் செந்தில்குமார் பிரதமர் வீடு கட்டும் திட்டத்தில் வீடு வழங்க ரூபாய் 5000 தன்னிடம் வாங்கியுள்ளதாக கார்த்திகேயன் புகார் தெரிவித்ததாக கூறப்படுகிறது.

இந்த நிலையில் 10ஆம் தேதி இரவு கார்த்திகேயன் வீட்டிற்கு வந்த செந்தில்குமார் ஏன் புகார் கொடுத்தாய் என தகாத வார்த்தைகளால் கார்த்திகேயனை அவரது உறவினர்கள் முன்னிலையில் பேசியுள்ளார்.

இந்த காரணத்தினால் மன உளைச்சலில் இருந்த கார்த்திகேயன் கடந்த 19 ஆம் தேதி அன்று பூச்சி மருந்து குடித்து தற்கொலைக்கு முயன்றுள்ளார் உடனே அவரது குடும்பத்தினர் அவரை மீட்டு திருவாரூர் அரசு மருத்துவக் கல்லூரியில் சிகிச்சைக்காக அனுமதித்தனர் அப்போது சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.


இந்நிலையில் அவரது இறப்புக்கு காரணம் பள்ளிவர்த்தி ஊராட்சி மன்ற தலைவர் மாலாவின் கணவர் செந்தில்குமார் தான் என்றும் அவரை கைது செய்ய வேண்டும் எனவும் கார்த்திகேயன் மனைவி ராதா உள்ளிட்ட குடும்பத்தார் புகார் அளித்து வருகின்றனர். இது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.


Source - News 18 tamil nadu

Next Story
கதிர் தொகுப்பு
Trending News