Begin typing your search above and press return to search.
இஸ்ரேலுக்கு இந்தியா ஆதரவு பிரதமர் மோடி அறிவிப்பு!
இஸ்ரேலுக்கு இந்தியா ஆதரவளிப்பதாக பிரதமர் மோடி அறிவிப்பு விடுத்துள்ளார்.
By : Karthiga
இஸ்ரேல் மீது ஹமாஸ் பயங்கரவாதிகள் நேற்று திடீர் தாக்குதல் நடத்தினர். இதனால் மேற்கு கரையில் போர் தொடங்கியிருக்கிறது. இந்த கடினமான நேரத்தில் இஸ்ரேலுக்கு இந்தியா துணைநிற்கும் என பிரதமர் மோடி அறிவித்துள்ளார். மேலும் இந்த தாக்குதலை பயங்கரவாத தாக்குதல் என கூறி அவர் கண்டனம் தெரிவித்தார்.
இது தொடர்பாக அவர் கூறுகையில் இஸ்ரேலில் பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்திய செய்தி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. எங்கள் எண்ணங்களும் பிரார்த்தனைகளும் அப்பாவிகள் மற்றும் அவர்களது குடும்பத்தினருடன் உள்ளன. இந்த கடினமான நேரத்தில் இஸ்ரேலுடன் நாங்கள் துணையாக நிற்கிறோம் என தெரிவித்தார்.
SOURCE :DAILY THANTHI
Next Story