பிரதமர் மோடியால் ராம ராஜ்ஜியத்திற்கு அஸ்திவாரம் போடப்பட்டுள்ளது - கவர்னர் ஆர்.என்.ரவி!
ராமராஜ்ஜியத்துக்கு அஸ்திவாரம் போடப்பட்டுள்ளது என்று தமிழக கவர்னர் ஆர்.என்.ரவி கூறியுள்ளார்.
By : Karthiga
அயோத்தியில் ராமர் கோவில் கும்பாபிஷேக நிகழ்ச்சி 'சென்னையில் அயோத்தி' எனும் சிறப்பு நிகழ்ச்சி ஆழ்வார்பேட்டையில் உள்ள நாரத கானா சபாவில் நேற்று நடைபெற்றது. இந்த விழாவில் சிறப்பு விருந்தினர்களாக கவர்னர் ரவி , இசையமைப்பாளர் இளையராஜா ஆகியோர் கலந்து கொண்டனர். விழாவில் கவர்னர் ஆர் என் ரவி தனது பேச்சை தொடங்கும் முன்பு 'ஜெய் ஸ்ரீராம்' என்று கோஷம் எழுப்பினார் .பின்னர் அவர் பேசியதாவது:-
வாழ்நாளில் ஒருமுறை மட்டுமே கிடைக்கும் அனுபவத்தை இன்று பெற்றிருக்கிறோம். இன்றைய தினம் ராமராஜ்ஜியத்துக்கு அஸ்திவாரம் போட்ட நாளாகும். இந்தியாவின் வெற்றிகரமான பயணம் தொடங்கியுள்ளது. நாம் சுதந்திரம் அடைந்து 1947 ஆகஸ்ட் 15ஆம் தேதியை போன்று இந்நாளும் இந்திய சரித்திரத்தில் முக்கியத்துவம் வாய்ந்த நாளாக அமைந்துள்ளது . 'ராமர் இல்லாமல் பாரத நாடு இல்லை 'ராமர் பாரதம் தமிழ்நாடு ஆகிய மூன்றையும் எவராலும் பிரிக்க முடியாது. நாட்டில் பல்வேறு இன மக்கள், மொழி பேசக்கூடிய மக்கள் இருக்கிறார்கள். பாரதத்திலும் ஒவ்வொரு அங்கத்திலும் இசை, நடனம், இலக்கியம் அனைத்திலும் ராமர் இருக்கிறார்.
சிலப்பதிகாரத்தில் ராமரை பற்றி இளங்கோவடிகள் தெளிவாக கூறியுள்ளார். ராமர் உருவாக்கிய ராஜ்யத்தை போன்று பிரதமர் மோடி 10 ஆண்டுகளாக இந்தியாவை வலுவான நாடாக உருவாக்கி வருகிறார். பிரதமர் மோடி எதிர்கால இராமராஜ்ஜியத்திற்கான அடித்தளத்தை உருவாக்கியுள்ளார். அவருக்கு ராமர் எல்லாவற்றிலும் வெற்றியைத் தேடி தருவார். சனாதனம் என்ற மரத்தில் உருவானது தான் நம் பாரதம்.இதனை இனம், மதம், மொழி கலாச்சாரத்தை கொண்டு சுயலாபத்துக்காக பிரிவினை ஏற்படுத்துகின்றனர். இனிமேல் பாரதத்தில் பிரிவினை ஏற்படுத்த முடியாது. அடுத்த 22 ஆண்டுகளில் வளர்ச்சி அடைந்த ராமராஜ்ஜியத்தை அடையப்போகிறோம். இவ்வாறு அவர் பேசினார்.
SOURCE :DAILY THANTHI
SOURCE :DAILY THANTHI