Begin typing your search above and press return to search.
கடந்த 9 ஆண்டுகளில் பிரதமர் மோடி ரயில்வே துறையை மாற்றிவிட்டார் - அஸ்வினி வைஷ்ணவ் பெருமிதம்!
கடந்த ஒன்பது ஆண்டுகளில் பிரதமர் மோடி ரயில்வே துறையை மாற்றியமைத்து விட்டார் என்று மத்திய ரயில்வே மந்திரி அஸ்வினி வைஷ்ணவ் பெருமிதத்துடன் பேசினார்.
By : Karthiga
செகந்திராபாத் ரயில் நிலையத்தில் நேற்று நடந்த வந்தே பாரத் ரயில் சேவை தொடக்க விழாவில் மத்திய ரயில்வே மந்திரி அஸ்வினி வைஷ்ணவ் கலந்து கொண்டார் .பின்னர் ஹைதராபாத்தில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் அவர் கலந்து கொண்டு பேசும்போது, பிரதமர் மோடியின் தலைமையின் கீழ் இந்திய ரயில்வே துறை உலக தரம் வாய்ந்த நிலையங்கள் ,ரயில்கள் மற்றும் புதிய பாதைகள், இரட்டிப்பு மற்றும் மின்மயமாக்கல் என புதிய திட்டங்களை முடிப்பதில் விரிவான முன்னேற்றத்துடன் அனைத்து வளர்ச்சியும் கண்டு வருகிறது என்று பெருமிதத்துடன் தெரிவித்தார்.
கடந்த 9 ஆண்டுகளில் இந்திய ரயில்வே துறையை பிரதமர் மோடி மாற்றிவிட்டதாக கூறிய அஸ்வினி வைஷ்ணவ் தெலுங்கானாவில் ரயில்வே கட்டமைப்பை வவலுப்படுத்துவதில் அரசு தன்னால் முடிந்த அளவு முயற்சி செய்து வருவதாகவும் தெரிவித்தார்.
Next Story