அரபு நாடே அசந்து நிற்கும் வகையில் பேச்சுவார்த்தை நடத்திய பிரதமர் மோடி: உள்ளூர் பணத்தில் வர்த்தகத்துக்கு ஒப்புதல்!
ஐக்கிய அரபு அமீரக அதிபர் ஷேக் முகமது பின் ஜாஹித் அல் நஹ்யானை பிரதமர் மோடி அபுதாபியில் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினார். இதில் இரு நாடுகளுக்கு இடையேயான வர்த்தகத்தை உள்ளூர் பணத்திலேயே மேற்கொள்ள ஒப்புக்கொள்ளப்பட்டது.

By : Karthiga
பிரான்ஸ் நாட்டுக்கு அரசு முறை பயணம் செய்த பிரதமர் மோடி அந்த நாடு தேசிய தின கொண்டாட்டங்களில் பங்கேற்று விட்டு நேற்று காலையில் ஐக்கிய அரபு அமீரகம் சென்றார். தலைநகர் அபுதாபியில் உள்ள அதிபர் மாளிகையில் பிரதமர் மோடிக்கு பாரம்பரிய வரவேற்பு அளிக்கப்பட்டது. அமீரக முப்படை அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக்கொண்ட பிரதமர் மோடி அமிரக அதிபர் ஷேக் முகமது பின் ஜாயித் அல் நஹ்யான் கட்டித்தழுவி வரவேற்றார்.
பின்னர் இரு தலைவர்களும் விரிவான பேச்சு வார்த்தை நடத்தினர். இதில் பல்வேறு துறைகளில் இரு நாடுகளுக்கு இடையேயான உறவுகளை வலுப்படுத்துவது குறித்து ஆலோசனை நடந்தது இதன் முக்கியமாக இரு நாடுகளுக்கு இடையேயான வர்த்தகத்தை அவரவர் சொந்த நாட்டு பணங்களிலேயே மேற்கொள்வதற்கான ஒப்பந்தம் கையெழுத்து போடப்பட்டது. அதன்படி உள்ளூர் பணம் பயன்பாட்டை ஊக்குவிக்கும் கட்டமைப்பை நிறுவுதல் மற்றும் இரு நாடுகளுக்கு இடையே வேகமான பண பரிமாற்றம் தொடர்பான புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்தாகின.
பிரதமர் மோடி மற்றும் அமீரக அதிபர் முன்னிலையில் இந்த ஒப்பந்தத்தில் இந்திய ரிசர்வ் வங்கி கவர்னர் சக்தி காந்ததாஸ் மற்றும் அமீரக மத்திய வங்கிய கவர்னர் காலத் முகமது பலமா ஆகியோர் கையெழுத்து போட்டனர். இதன் மூலம் அமீரகத்துடன் இந்திய ரூபாயிலேயே இனிமேல் வர்த்தகம் மேற்கொள்ள முடியும். அமீரக அதிபருடனான சந்திப்புக்கு பின் பிரதமர் மோடி செய்தியாளர்களிடம் கூறியதாவது:-
அதிபர் ஷேக் முகமது பின் ஜாஹித் அல் நஹ்யானிடம் இடம் இருந்து எப்போதும் ஒரு சகோதர அன்பை பெற்று வருகிறேன். நமது இரு நாடுகளுக்கிடையே ஆன உறவுகள் விரிவடைந்ததற்கு நீங்கள் பெரும் பங்களிப்பை செய்திருக்கிறீர்கள். இந்தியாவில் உள்ள ஒவ்வொருவரும் உங்களை உண்மையான நண்பராகவே பார்க்கிறார்கள். இந்தியா அமீரகம் இடையே விரிவான பொருளாதாரக் கூட்டு ஒப்பந்தம் கடந்த ஆண்டு கையெழுத்து போட்ட பின்னர் இரு நாடுகளுக்கு இடையான வர்த்தகம் 20 சதவீதம் அதிகரித்து இருக்கிறது.
இரு நாடுகளின் பணத்தில் வர்த்தக நடவடிக்கைகள் மேற்கொள்வது தொடர்பாக இன்று கையெழுத்து போடப்பட்ட ஒப்பந்தம் இரு நாடுகளுக்கு இடையேயான வலுவான பொருளாதார ஒத்துழைப்பையும் பரஸ்பர நம்பிக்கையையும் காட்டுகிறது. இது பரஸ்பர வர்த்தகம் மற்றும் முதலீட்டை மேலும் அதிகரிக்கும். இருநாட்டு மத்திய வங்கிகளுக்கு இடையே போடப்பட்டுள்ள புரீந்துணர்வு ஒப்பந்தங்கள் இருநாட்டு ஒத்துழைப்பின் மிக முக்கியமான அம்சமாகும். இது மேம்பட்ட பொருளாதார ஒத்துழைப்புக்கு வழிவகுக்கும். அத்துடன் சர்வதேச நிதி தொடர்புகளை எளிதாக்கும். இவ்வாறு பிரதமர் கூறினார்.
SOURCE:DAILY THANTHI
