Kathir News
Begin typing your search above and press return to search.

நாட்டின் மிக நீண்ட கேபிள் பாலம் - சுதர்சன் சேதுவை திறந்து வைத்த பிரதமர் மோடி!

நாட்டின் மிக நீண்ட கேபிள் பாலமான சுதர்சன் சேது கேபிள் பாலாத்தை பிரதமர் மோடி திறந்து வைத்தார்.

நாட்டின் மிக நீண்ட கேபிள் பாலம் - சுதர்சன் சேதுவை திறந்து வைத்த பிரதமர் மோடி!

KarthigaBy : Karthiga

  |  26 Feb 2024 1:00 PM GMT

குஜராத்தில் நான்கு வழி கொண்ட கேபிள் பாலம் ஒன்றை பிரதமர் மோடி மக்கள் பயன்பாட்டிற்காக நேற்று தொடங்கி வைத்தார். சுதர்சன் சேது பாலம் தனித்துவமான வடிவமைப்பை கொண்டுள்ளது. பாலத்தின் நடைபாதை பகவத் கீதையின் வசனங்களால் அலங்கரிக்கப்பட்டுள்ளது .இருபுறமும் கிருஷ்ணரின் உருவங்கள் உள்ளன. ஓகா மற்றும் பெய்ட்துவாரகா தீவை இணைக்கும் சுதர்சன் சேது பாலம் ரூபாய் 979 கோடி செலவில் கட்டப்பட்டுள்ளது. 2.3 கிலோ மீட்டர் நீளமுள்ள இந்த பாலத்திற்கு 2017 அக்டோபரில் பிரதமர் மோடி அடிக்கல் நாட்டினார்.


அப்போது தேசிய பிரதமர் மோடி இது பழைய மற்றும் புதிய துவாரகாவை இணைக்கும் என்று கூறினார். இந்த நான்கு வழிச்சாலை பாலம் 27.20 மீட்டர் அகலமானது. சிக்னேச்சர் பாலம் என்று அழைக்கப்படும் இந்த பாலம் சுதர்சன் சேது அல்லது சுதர்சன் பாலம் என பெயர் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. பெய்ட் துவாரகா என்பது ஒகா துறைமுகத்திற்கு அருகில் உள்ள ஒரு தீவு. இது துவாரகா நகரத்தில் இருந்து கிட்டத்தட்ட 30 கிலோமீட்டர் தொலைவில் உள்ளது. அங்கு பகவான் கிருஷ்ணரின் புகழ் பெற்ற துவாரகாதீஷ் கோவில் அமைந்துள்ளது.


இன்று பாலத்தை திறந்து வைத்த பிரதமர் மோடி துவாரகாத்தீஷ் கோவிலுக்கும் சென்று வழிபாடு நடத்தினார். ராஜ்கோட்டில் முதல் அகில இந்திய மருத்துவ அறிவியல் கழகத்தை பிரதமர் மோடி திறந்து வைத்தார். ராஜ்கோட் எய்ம்ஸ் தவிர ஆந்திர பிரதேசம், பஞ்சாப் , உத்தர பிரதேசம் மற்றும் மேற்குவங்கம் ஆகிய மாநிலங்களிலும் எய்ம்ஸ் மருத்துவமனைகளை திறந்து வைத்தார். ராஜ்கோட்டில் அமைந்த எய்ம்ஸ் மருத்துவமனையை சேர்த்து ஐந்து ஸ்பெஷலிட்டி மருத்துவமனைகள் 6,300 கோடி செலவில் மத்திய அரசால் கட்டப்பட்டுள்ளன.


SOURCE :Kaalaimani.com

Next Story
கதிர் தொகுப்பு
Trending News