Kathir News
Begin typing your search above and press return to search.

திருச்சி ரயில்வே கோட்டத்தில் ரூபாய் 14 கோடி மதிப்பில் இரண்டு குட்ஷெட் யார்டு- பிரதமர் மோடி தலைமையில் தொடக்கம்!

திருச்சி ரயில்வே கோட்டத்தில் ரூபாய் 14 கோடி மதிப்பில் இரண்டு குட்ஷெட் யார்டை பிரதமர் மோடி நாளை காணொலி காட்சி மூலம் தொடங்கி வைக்கிறார்.

திருச்சி ரயில்வே கோட்டத்தில் ரூபாய் 14 கோடி மதிப்பில் இரண்டு குட்ஷெட் யார்டு- பிரதமர் மோடி தலைமையில் தொடக்கம்!

KarthigaBy : Karthiga

  |  11 March 2024 4:53 PM GMT

பிரதமர் நரேந்திர மோடி நாளை ரயில்வே உள் கட்டமைப்பு திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டி பணி முடிந்த திட்டங்களை தொடங்கி வைத்து நாட்டுக்கு அர்பணிக்கிறார் .இது தொடர்பாக திருச்சியில் ரயில்வே கோட்ட மேலாளர் அன்பழகன் நேற்று நிருபர்களிடம் கூறியதாவது :-


நமது நரேந்திர மோடி புதிய வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் ,ஒரு ரயில் நிலையம் ,ஒரு தயாரிப்பு கடைகள் மற்றும் புதிய குட்ஷெட்டுகள் போன்ற 80,000 கோடி மதிப்பிலான பல ரயில்வே உள்கட்டமைப்பு திட்டங்களை காணொளி காட்சி மூலம் நாளை தொடங்கி வைக்கிறார். இதில் திருச்சி ரயில்வே கோட்டத்தில் உள்ள 44 ரயில் நிலையங்களில் ஒரு நிலையம், ஒரு தயாரிப்பு கடைகள், பட்டுக்கோட்டை மற்றும் திருத்துறைப்பூண்டியில் தலா ரூபாய் 7 கோடி மதிப்பில் இரண்டு குட்ஷெட்டுகள் மற்றும் திருச்சூர் ரயில்வே ஜங்ஷன் பகுதியில் உள்ள மருந்தகமும் அடங்கும் .


கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம் பட்டுக்கோட்டையில் உணவு தானியங்கள் ஏற்றுதல் தொடங்கப்பட்டது. இதுவரை 28.5 ரேக்குகள் ஏற்றப்பட்டுள்ளன. திருத்துறைப்பூண்டி குட்ஷெட் யார்டில் கடந்த வருடம் நவம்பர் மாதம் உணவு தானியங்கள் ஏற்றுதல் தொடங்கி இதுவரை 18 ரேக்குகள் ஏற்றப்பட்டுள்ளன. திருச்சியில் இருந்து பெங்களூரு மற்றும் சென்னைக்கு இயக்கக் கேட்டுள்ளோம்.


மேலும் கூடுதலாக ஒரு நிலையம் , தயாரிப்பு கடைகள் அமைக்க இடம் தேர்வு நடைபெற்று வருகிறது. மைசூர் சென்னை விரைவு ரயில் கடலூர் வரை நீட்டிக்கப்பட்டுள்ளது மற்றும் கூடுதலாக இரண்டு மெமோ ரயில்கள் கேட்டுள்ளோம் என்றார். இதில் ரயில்வே கோட்ட வணிக மேலாளர் செந்தில்குமார் திருச்சி கோட்டை தொலைதொடர்பு இன்ஜினியர் ஆகியோர் உடன் இருந்தனர்.


SOURCE :DAILY THANTHI

Next Story
கதிர் தொகுப்பு
Trending News