தமிழ்நாட்டில் ரூபாய் 17,300 கோடி மதிப்புள்ள திட்டங்களை தொடங்கி வைத்த பிரதமர் மோடி!
தமிழ்நாட்டில் ரூபாய் 17,300 கோடி ரூபாய் மதிப்புள்ள திட்டங்களை தொடங்கி வைத்தார் பிரதமர் மோடி.
By : Karthiga
தமிழ்நாட்டில் ரூபாய் 17,300 கோடி திட்டங்களை பிரதமர் நரேந்திர மோடி தொடங்கி வைத்தார் .தூத்துக்குடி வ .உ சிதம்பரனார் துறைமுகத்தில் வெளி துறைமுக சரக்கு பெட்டக முனையத்திற்கு பிரதமர் மோடி அடிக்கல் நாட்டுகிறார். பிரதமர் நரேந்திர மோடி தமிழ்நாடு, மகாராஷ்டிரா, கேரளா ஆகிய மாநிலங்களில் பயணம் மேற்கொள்கிறார். பல்லடம் அருகே உள்ள மாதப்பூரில் நடந்த பிரம்மாண்டமான பொதுக் கூட்டத்தை தமிழகமே வியக்கும் வகையில் மிகப் பெரிய அளவில் பாஜக ஏற்பாடு செய்திருந்தது .மாதப்பூர் கிராமத்தில் ஆயிரம் ஏக்கர் பரப்பளவில் பொதுக்கூட்டம் மைதானத்தை தயார் செய்து இதற்காக தாமரை வடிவில் மேடை அமைத்திருந்தனர்.
இந்த பொதுக்கூட்டத்தில் கலந்து கொண்டு தமிழக மக்களுக்காக பிரதமர் மோடி சிறப்புரையாற்றினார் .பின்னர் அங்கிருந்து மதுரைக்குச் சென்றார். மதுரையில் வாகன உற்பத்தி துறையில் உள்ள சிறு குறு மற்றும் நடுத்தர தொழில் முனைவோருக்கு எதிர்காலத்தை உருவாக்குதல் டிஜிட்டல் இயக்கம் நிகழ்ச்சியில் பிரதமர் மோடி பங்கேற்று வாகன உற்பத்தி துறையில் பணிபுரியும் ஆயிரக்கணக்கான குரு சிறு மற்றும் நடுத்தர தொழில்களை தொடங்கி வைக்கிறார் . தூத்துக்குடியில் நடைபெறும் பொது நிகழ்ச்சிகளில் வ.உ சிதம்பரனார் துறைமுகத்தில் வெளி துறைமுக சரக்கு பெட்டக மையத்திற்கு பிரதமர் அடிக்கல் நாட்டுகிறார்.
இந்த சரக்கு பெட்டகம் வ.உ சிதம்பரனார் துறைமுகத்தை கிழக்கு கடற்கரை காண கப்பல் போக்குவரத்து மையமாக மாற்றுவதற்கான ஒரு நடவடிக்கையாகும். வ.உ.சிதம்பரனார் துறைமுகத்தை நாட்டின் முதலாவது பசுமை ஹைட்ரஜன் துறைமுகமாக மாற்றும் பல்வேறு திட்டங்களையும் பிரதமர் தொடங்கி வைக்கிறார். கடல் நீரை குடிநீராகும் ஆலை, ஹைட்ரஜன் உற்பத்தி மற்றும் பதுங்குகுழி வசதி போன்றவை இந்த திட்டங்களில் அடங்கும் .பசுமை கப்பல் முன்முயற்சியின் கீழ் இந்தியாவின் முதலாவது உள்நாட்டு பசுமை ஹைட்ரஜன் எரிபொருள் செல் உள்நாட்டு நீர்வழி கப்பலையும் பிரதமர் மோடி தொடங்கி வைக்கிறார் .
இந்த நிகழ்ச்சியின் போது பத்து மாநிலங்கள் யூனியன் பிரதேசங்களில் உள்ள 75 கலங்கரை விளக்கங்களில் உள்ள சுற்றுலா வசதிகளையும் பிரதமர் மோடி நாட்டுக்கு அர்ப்பணிக்கிறார். இந்த நிகழ்ச்சியின் போது வாஞ்சிமணியாச்சி -நாகர்கோவில் ரயில் பாதை, வாஞ்சி மணியாச்சி திருநெல்வேலி பிரிவு மற்றும் மேலப்பாளையம் ஆரல்வாய்மொழி பிரிவு உட்பட இரட்டை ரயில் பாதை திட்டங்களை பிரதமர் மோடி நாட்டுக்கு அர்பணிக்கிறார். சுமார் 4,586 கோடி செலவில் தமிழகத்தில் நான்கு சாலை திட்டங்களை பிரதமர் நாட்டுக்கு அர்பணிக்கிறார். இந்த திட்டங்கள் போக்குவரத்தை மேம்படுத்துதல் ,பயண நேரத்தை குறைத்தல், சமூக பொருளாதார வளர்ச்சியை மேம்படுத்துதல், புனித யாத்திரை பயணங்களை எளிதாக்குதல் ஆகியவற்றை நோக்கமாகக் கொண்டுள்ளன.
SOURCE :Dinamani