Kathir News
Begin typing your search above and press return to search.

பா.ஜ.க எம்பி'களுக்கு பிரதமர் மோடி போட்ட திடீர் கட்டளை!

ஆட்சிக்கு வந்து 9 ஆண்டுகள் ஆவதை ஒட்டி தொகுதிகளுக்கு சென்று அரசின் திட்டங்களை மக்களுக்கு விளக்கி சொல்லுங்கள் என்று பா.ஜ.க எம்.பி க்களுக்கு பிரதமர் மோடி கட்டளையிட்டார்.

பா.ஜ.க எம்பிகளுக்கு பிரதமர் மோடி போட்ட திடீர் கட்டளை!

KarthigaBy : Karthiga

  |  29 March 2023 5:15 AM GMT

அதானி நிறுவன விவகாரம் ராகுல் காந்தி பதவிப்பறிப்பு பிரச்சனை போன்றவற்றால் நாடாளுமன்றம் தொடர்ந்து முடங்கி வருகிறது. இதில் மதிய பா.ஜ.க அரசுக்கு எதிராக எதிர்கட்சிகள் ஓரணியில் திரண்டு போராடி வருகின்றன. இந்த தருணத்தில் பா.ஜ.க எம்.பிக்கள் கூட்டம் டெல்லியில் நேற்று நடந்தது. பிரதமர் மோடி பா.ஜ.க தலைவர் ஜே.பி நட்டா, மூத்த மத்திய மந்திரிகள் அமித்ஷா நிதின் கட்காரி ஜெய்சங்கர்,பியூஷ் கோயல் மற்றும் பா.ஜ.க எம்.பிக்கள் கலந்து கொண்டனர்.


இந்த கூட்டத்தில் பிரதமர் மோடி பேசுகையில் கூறியதாவது:- நமது கட்சியின் நிறுவன நாளான ஏப்ரல் ஆறாம் தேதி தொடங்கி அம்பேத்கர் பிறந்த நாளான ஏப்ரல் 14ஆம் தேதி வரையிலான காலகட்டத்தை எம்.பிக்கள் சமூக நீதிக்காக அர்ப்பணிக்க வேண்டும். மத்தியில் ஆட்சிக்கு வந்து ஒன்பதாண்டுகள் ஆவது ஒட்டி எம்.பிக்கள் தங்கள் தொகுதிகளுக்கு சென்று அரசின் பல்வேறு திட்டங்கள் பற்றி விளம்பரப்படுத்துவதோடு மக்களுக்கு விளக்கிச் சொல்ல வேண்டும்.


மரங்கள், தானியங்கள் , பிற பொருள்கள் வாயிலாக மனிதாபி மனத்தை வளர்த்து வருகிற பூமித்தாய் ரசாயனங்களின் நச்சுகளில் இருந்து தான் விடுதலையாவதற்காக கதறுகிறார். எம்.பிக்கள் புதிய தொழில்நுட்பங்களை கற்றுக் கொள்வதற்கு வல்லுனர்களின் சேவையை பயன்படுத்திக் கொள்ள வேண்டும் . எதையாவது அறியாமல் இருப்பது அதை பயன்படுத்தாததற்கு ஒரு காரணமாக இருந்து விடக்கூடாது. எதிர்கட்சிகளின் போராட்டங்கள் பற்றிய குறிப்பிடும் வகையில் குஜராத் தேர்தலின் போது பா.ஜ.க தேர்தல்களில் மேலும் மேலும் வெற்றி பெறுகிற போது இது போன்ற போராட்டங்கள் தீவிரமடையும் என்று குறிப்பிட்டேன்.


தீவிரமான அடிமட்ட அளவிலான தாக்குதல்களை கட்சி எதிர்கொள்ளும் இவ்வாறு பிரதமர் மோடி பேசியதாக மத்திய மந்திரிகள் அர்ஜுன் ராம் மேக்வாலும் பிரகலாத் ஜோஷியும் தெரிவித்தனர். வடகிழக்கு மாநிலங்களில் பா.ஜ.க மற்றும் கூட்டணி கட்சிகளில் வெற்றிக்குப் பின்னர் பா.ஜ.க எம்பிக்கள் கூட்டம் நடைபெறுவது இதுவே முதல் முறையாகும். இந்த தேர்தல் வெற்றிக்காக பிரதமர் மோடிக்கு கூட்டத்தில் புகழாரம் சூட்டப்பட்டது.




Next Story
கதிர் தொகுப்பு
Trending News