Kathir News
Begin typing your search above and press return to search.

ராமகிருஷ்ணா மடத்தின் தலைவர் ஸ்மரானந்தாவின் கோட்பாடுகள் குறித்து பிரதமர் மோடி புகழாரம்!

ராமகிருஷ்ண மடத்தின் தலைவர் சுவாமி ஸ்மரானந்தா மகராஜ் உடல் நலக்குறைவால் கடந்த 26 ஆம் தேதி காலமானார். அவருடைய மறைவுக்கு பிரதமர் மோடி புகழஞ்சலி செலுத்தியுள்ளார்.

ராமகிருஷ்ணா மடத்தின் தலைவர் ஸ்மரானந்தாவின் கோட்பாடுகள் குறித்து பிரதமர் மோடி புகழாரம்!
X

KarthigaBy : Karthiga

  |  29 March 2024 1:40 PM GMT

நாடாளுமன்றத் தேர்தல் என்ற மாபெரும் திருவிழாவின் பரபரப்பு கிடையே ஒரு செய்தி மனதை சில நொடிகள் தடுமாற வைத்தது. இந்திய ஆன்மீக உணர்வின் முதன்மை ஆளுமையான ஸ்ரீமத் சுவாமி ஸ்மரானந்தா மகராஜின் சமாதிநிலை ஒரு தனிப்பட்ட இழப்பாகும். சில ஆண்டுகளுக்கு முன் ஸ்வாமி ஆத்ம ஸ்தானந்தாவின் மகா பிரயாணமும் இப்போது சுவாமி ஸ்மாரானந்தாவின் நித்திய பயணமும் பலரை வருத்தத்தில் ஆழ்த்தியுள்ளது. ராமகிருஷ்ணா மடம் மற்றும் மிஷினில் லட்சக்கணக்கான பக்தர்கள் துறவிகள் மற்றும் பின்பற்றுபவர்களை போல எனது இதயமும் சோகத்துடன் உள்ளது. இந்த மாத தொடக்கத்தில் நான் மேற்குவங்கம் சென்றிருந்தேன்.

அப்போது சுவாமி மராநந்தாவின் உடல்நலம் குறித்த மருத்துவமனைக்கு சென்று விசாரித்தேன் ஆத்மஸ்தானந்தாவை போல ஸ்மரானந்தாவும் ஆச்சார்ய ராமகிருஷ்ண பரமஹம்சர், மாதா சாரதா, ஸ்வாமி விவேகானந்தர் ஆகியோரின் சிந்தனைகளை உலகம் முழுவதும் பரப்பதற்காக நமது வாழ்நாள் முழுவதையும் அர்ப்பணித்தவர். இந்த கட்டுரையை எழுதும் போது அவருடனான எனது சந்திப்புகள் உரையாடல்கள் எனது பழைய நினைவுகள் எனது மனதில் உயிரோட்டமாக இருக்கின்றன.

2020 ஆம் ஆண்டு ஜனவரியில் நான் பேலூர் மடத்தில் தங்கி இருந்த போது விவேகானந்தரின் அறையில் அமர்ந்து தியானம் செய்தேன். அந்த பயணத்தின் போது ஆத்மஸ்தானந்தா பற்றி ஸ்மரானந்தாவுடன் நீண்டநேரம் பேசினேன். ராமகிருஷ்ணா மிஷனுடனும் பேலூர் மடத்துடனும் எனக்கு எவ்வளவு நெருக்கமான உறவு இருக்கிறது என்பதை நீங்கள் அறிவீர்கள்.

ஒரு ஆன்மீக சாதகர் என்ற முறையில் கடந்த 50 ஆண்டுகளுக்கு மேலாக நான் பல்வேறு மகான்களையும் மகாத்மாக்களையும் சந்தித்துள்ளேன். அவர்களில் ஆத்மஸ்தானந்தா, ஸ்மரானந்தா தான் போன்ற ஆளுமைகள் உள்ளனர் .வாழ்க்கையின் மிக முக்கியமான காலகட்டத்தில் பொது சேவையின் மெய்யான கொள்கை கடவுளுக்கு செய்யும் சேவை என்று இத்தகைய துறவிகள் எனக்கு கற்பித்தனர்.

கல்வி மற்றும் கிராமப்புற மேம்பாட்டிற்கு ராமகிருஷ்ண மிஷன் செய்து வரும் பணிகள் நம் அனைவருக்கும் உத்வேகம் அளிக்கிறது. ராமகிருஷ்ணா மிஷன் இந்தியாவின் ஆன்மீக உணர்வு கல்வியில் அதிகாரிமளித்தல், மனிதாபிமான சேவை ஆகியவற்றில் பணியாற்றுகிறது. 1978 ஆம் ஆண்டு மேற்கு வங்கத்தை பேரழிவு வெள்ளம் தாக்கிய போது ராமகிருஷ்ணா மிஷன் தனது தன்னலமற்ற சேவையால் அனைவரின் இதயங்களையும் வென்று 2001 ஆம் ஆண்டில் கட்ச் நிலநடுக்கத்தின் போது என்னை அழைத்து பேரழிவு மேலாண்மைக்கு சாத்தியமான அனைத்து வழிகளிலும் ராமகிருஷ்ணா மிஷன் உதவ தயாராக உள்ளது என்று என்னிடம் கூறிய முதலாம் அவர்களில் ஒருவர் ஆத்ம ஸ்தானந்தா .

அவரது அறிவுறுத்தல்கள் படி ராமகிருஷ்ணா மிஷன் நிலநடுக்கத்தின் நெருக்கடியான காலகட்டத்தில் மக்களுக்கு நிறைய உதவிகளை செய்தது. இந்திய வளர்ச்சி பயணத்தில் பல கட்டங்களில் சமூக மாற்றம் குறித்த புதிய உணர்வை நமக்கு அளித்த ஆத்ம ஸ்தானந்தா ஸ்ரமானந்தா போன்ற துறவிகளால் நமது தாய்நாடு ஆசிர்வதிக்கப்பட்டுள்ளது. சமூகத்தின் நலனுக்காக ஒன்றிணைந்து பணியாற்ற இந்த துறவிகள் நமக்கு தூண்டுகோலாக இருந்துள்ளனர் .இவர்களின் கோட்பாடுகள் இப்போது வரை முக்கியமானவை .வரும் காலங்களில் இந்த சிந்தனைகள் வளர்ச்சி அடைந்த பாரதம் மற்றும் அமிர்த காலத்தில் நமது மனது வலிமையாக மாறும். இத்தகைய புனித ஆத்மாக்களுக்கு நான் மீண்டும் ஒருமுறை ஒட்டுமொத்த தேசத்தின் சார்பில் எனது அஞ்சலியை செலுத்துகிறேன்.ராமகிருஷ்ணா மிஷனுடன் தொடர்புடைய அனைவரும் அவரது பணியை மேலும் முன்னெடுத்துச் செல்வார்கள் என்று நான் நம்புகிறேன். இவ்வாறு தனது கட்டுரையில் பிரதமர் மோடி கூறியுள்ளார்.


SOURCE :DAILY THANTHI

Next Story
கதிர் தொகுப்பு
Trending News