தாய்லாந்தில் தமிழில் திருக்குறளை படித்து பொருள் கூறி அசத்திய பிரதமர் மோடி.!
தாய்லாந்தில் தமிழில் திருக்குறளை படித்து பொருள் கூறி அசத்திய பிரதமர் மோடி.!
By : Kathir Webdesk
தாய்லாந்து சென்ற பிரதமர் மோடி பாங்காக்கில் இந்திய வம்சாவளியினர் கூட்டத்தில் கலந்து கொண்டார்,பாங்காங்கில் நடந்த சுவாஸ்தி பிஎம் மோடி என்ற நிகழ்ச்சியில் சுமார் 2 லட்சத்திற்கும் மேலான இந்தியர்கள் பங்கேற்றனர். விழாவில் பிரதமர் மோடி பேச்சை துவக்கியதும், தமிழில் 'வணக்கம்',என்று கூறி பேச்சை தொடங்கினார்.கூட்டத்தில் தாய்லாந்து மொழியில் மொழிபெயர்க்கப்பட்ட திருக்குறள் புத்தகத்தை வெளியிட்டு பேசினார். அவர் திருக்குறளை தமிழில் படித்து மேற்கோள்காட்டி அதற்கு பொருளும் கூறினார்.
தாளாற்றி தந்த பொருளெல்லாம் தர்க்கார்க்குவேளாண்மை செய்தற் பொருட்டு.
என்ற திருக்குறளை மேற்கோள் காட்டினார். தன் உழைப்பால் சேர்த்த பொருளெல்லாம் தகுதி உடையவர்களுக்கு உதவி செய்வதற்கே என்று திருக்குறளின் பொருளை எடுத்துரைத்தார்.
சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது. அதற்கு நன்றி கூறிக் கொள்கிறேன். இந்தியா தாய்லாந்து இடையே ஆழமான உறவு உள்ளது. உலகில் வாழும் இந்தியர்களின் அன்புக்கு நான் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். இந்தியர்களாக வாழ்வதில் நாம் பெருமை கொள்வோம்.இந்தியா அதிவேகமாக வளர்ச்சி அடைந்து வருகிறது. 130 கோடி இந்தியர்கள் ஓன்று சேர்ந்து புதிய இந்தியாவை உருவாக்க பாடுபட்டு வருவோம்.
இந்தியாவின் வளர்ச்சிக்காக மக்கள் என்னை மீண்டும் பிரதமராக்கி உள்ளனர். 2019 தேர்தலில் 60 கோடி பேர் ஓட்டளித்துள்ளனர். அதில் அதிக பெண்கள் ஓட்டளித்துள்ளனர், இது வரலாற்று சிறப்பு மிக்கது. ஒருசிலர் நான் பிரதமர் ஆக விரும்பவில்லை, இருப்பினும் யார் நாட்டுக்காக உழைப்பவர்கள் என்று அறிந்த பெரும்பாலானோர் என்னை பிரதமராக்கி உள்ளனர்.
காஷ்மீரில் கடும் நடவடிக்கை எடுத்துள்ளோம். இது இந்தியா 5 டிரில்லியன் டாலர் பொருளாதார நாடாக உயர பாடுபடுவோம்.இந்தியாவில்பெண்கள் சிரமமின்றி, புகையில்லாத சமையல் செய்வதற்கு எட்டுக்கோடிக்கும் மேலாக இலவச கேஸ் சிலிண்டர் இணைப்பு வழங்கப்பட்டுள்ளது. அனைத்து இந்தியர்களையும் வங்கிகளுடன் இணைத்துள்ளோம். அனைவருக்கும் சுத்தமான குடிநீர் வழங்க முயற்சி மேற்கொண்டுள்ளோம்.' இவ்வாறு மோடி பேசினார்.