இந்திய கடற்படையின் அடையாளத்தை திருத்திய பிரதமர் மோடி
இந்திய கடற்படைக்கு புதிய கொடியை பிரதமர் மோடி அறிமுகப்படுத்தியுள்ளார்.
By : Mohan Raj
இந்திய கடற்படைக்கு புதிய கொடியை பிரதமர் மோடி அறிமுகப்படுத்தியுள்ளார்.
கொச்சி கப்பல் கட்டும் தளத்தில் இந்தியாவில் தயாரிக்கப்பட்ட முதல் உள்நாட்டு விமானம் தாங்கி கப்பலான ஐ.என்.எஸ் விக்ராந்தை நாட்டுக்கு அர்ப்பணித்த நிலையில் இந்திய கடற்படைக்கான புதிய கடற்படை கொடியை பிரதமர் மோடி வெளியிட்டார்.
புதிய கடற்படை கொடி பற்றி அனைவரும் சிலாகித்துப் பேசுவதில் பழைய கொடிய எதை குறிப்பிடுகிறது என்பதை பார்ப்போம் பழைய கொடியில் செயின்ட் ஜான் சிலுவை பொறிக்கப்பட்டிருக்கும்.
பழைய கொடியின் வெள்ளை பின்னணியில் சிவப்பு ஜார்ஜ் கிராஸ் மற்றும் மேல் இடது மூலையில் யுனைடெட் கிங்டம் இன் யூனியன் ஜாக் கொடி பொறிக்கப்பட்டிருக்கும்.
இதன் பின்னணி ஆனது ஆகஸ்ட் 15ம் தேதி 1947 ஆம் ஆண்டு இந்தியா சுதந்திரம் பெற்ற பிறகும் இந்திய பாதுகாப்பு படைகள் பிரிட்டிஷ் காலனித்துவ கொடிகள் மற்றும் பாட்சுகளை அணிந்து வந்தன ஜனவரி 26 1950'இல் தான் இந்தியமயமாக்கப்பட்ட முறைக்கு மாற்றம் செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.