விரைவில் டிஜிட்டல் கரன்சி அறிமுகப்படுத்துகிறார் பிரதமர் மோடி - மத்திய அமைச்சர் பகவத் காரத்
வளர்ந்த நாடுகளை விட இந்தியாவின் பொருளாதாரம் சிறப்பாக உள்ளது என மத்திய அமைச்சர் பகவத் காரத் தெரிவித்துள்ளார்.
By : Mohan Raj
வளர்ந்த நாடுகளை விட இந்தியாவின் பொருளாதாரம் சிறப்பாக உள்ளது என மத்திய அமைச்சர் பகவத் காரத் தெரிவித்துள்ளார்.
விருதுநகரில் வங்கியாளர்களின் சேவை மற்றும் பயனாளிகளின் பலன் குறித்த ஆய்வு கூட்டம் அரசின் நிதி இணை அமைச்சர் பகவத் காரத் தலைமையில் நடந்தது. கூட்டத்தை தொடர்ந்து மத்திய அமைச்சர் பகவத் காரத் செய்தியாளர்களிடம் பேசுகையில், 'இந்தியாவில் முன்னேற விளையும் மாவட்டங்கள் 112 உள்ளன இதில் விருதுநகர் மாவட்டம் முதல் மூன்று இடங்களுக்குள் உள்ளது பெருமை அளிக்கிறது. இதனால் மாவட்ட நிர்வாகத்திற்கு பாராட்டு தெரிவிக்கிறேன், தேசிய அளவில் ஒரு லட்சம் பேருக்கு 14 வங்கி கிளைகள் உள்ள நிலையில் விருதுநகர் மாவட்டத்தில் 13 வங்கிகளைகள் உள்ளன. எனவே உடனடியாக 15 வங்கி கிளைகளை திறப்பதற்கு நடவடிக்கை எடுக்க அறிவுறுத்தி உள்ளேன்.
வளர்ந்து வரும் பொருளாதார நாடுகளுக்கு இணையாக இந்தியாவில் விரைவில் ஈ கரன்சிகளை முதற்கட்டமாக டிஜிட்டல் வங்கிகளை பாரத பிரதமர் நரேந்திர மோடி விரைவில் அறிமுகப்படுத்த உள்ளார். இதனை தொடர்ந்து டிஜிட்டல் கரன்சிகள் அறிமுகம் செய்யப்படும். உலகளவில் பெரிய பொருளாதார நாடுகள் வரிசையில் இந்திய ஐந்தாவது இடத்தில் உள்ளது இந்த வரிசையில் வல்லரசு நாடான இங்கிலாந்து கூட நமக்கு அடுத்த நிலையிலே உள்ளது எனவே வளர்ந்த நாடுகளை விட இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி சிறப்பாக உள்ளது' என மத்திய அமைச்சர் தெரிவித்தார்.