Begin typing your search above and press return to search.
ஐக்கிய அரபு அமீரகத்தில் நூற்றாண்டு பெருமை பெறும் பிரதமர் மோடி - உச்சகட்ட கவுரவம் அளித்த இஸ்லாம் நாடுகள் : தனிச்சிறப்பு கண்ட முதல் இந்திய பிரதமர்!

By : Kathir Webdesk
இந்தியாவுக்கும், ஐக்கிய அரபு அமீரகத்துக்கும் இடையே நீண்ட காலமாக நெருங்கிய நட்புறவு நீடித்து வருகிறது. இது முந்தைய பா.ஜனதா ஆட்சியில் மேலும் நெருக்கமடைந்தது. குறிப்பாக பிரதமர் மோடி கடந்த 2015-ம் ஆண்டு அமீரகம் சென்று இருநாட்டு உறவுகளை பலப்படுத்துவது குறித்து அந்த நாட்டு தலைவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினார்.
பின்னர் கடந்த ஆண்டு பிப்ரவரியில் அங்கு நடந்த சர்வதேச மாநாட்டிலும் தலைமை விருந்தினராக கலந்து கொண்டார். அப்போதும் இருநாடுகளுக்கு இடையே பல்வேறு துறைகளில் ஒத்துழைப்பு குறித்து பட்டத்து இளவரசர் ஷேக் முகமது பின் சயாத் அல் நஹ்யானுடன் பேச்சுவார்த்தை நடத்தி இருந்தார்.
இதைப்போல அமீரக பட்டத்து இளவரசர் கடந்த 2016-ம் ஆண்டில் ஒருமுறையும், 2017-ம் ஆண்டு குடியரசு தினவிழாவுக்கு சிறப்பு விருந்தினராகவும் இந்தியாவுக்கு பயணம் மேற்கொண்டார். இதனால் இருநாடுகளுக்கு இடையே உறவு மேலும் பலப்பட்டு வருகிறது.
ஆர்டர் ஆப் சயாத் விருது:
இந்த உறவு பாலத்துக்கு உத்வேகம் அளிக்கும் வகையில் செயல்பட்டு வருவதற்காக பிரதமர் மோடிக்கு அமீரகத்தின் மிகவும் உயரிய விருதான ‘ஆர்டர் ஆப் சயாத்’ விருது கடந்த ஏப்ரல் மாதம் அறிவிக்கப்பட்டது. அமீரக நிறுவன தந்தையான ஷேக் சயாத் பின் சுல்தான் அல் நஹ்யானின் பெயரில் வழங்கப்படும் இந்த விருது அவரது நூற்றாண்டு பிறந்த தினத்தையொட்டி மோடிக்கு வழங்கப்படுவது கூடுதல் சிறப்பாகும்.
இந்த நிலையில் பிரதமர் மோடி அரசு முறை பயணமாக வருகிற 23-ந் தேதி அமீரகம் செல்கிறார். 24-ந் தேதி வரை அங்கு தங்கியிருக்கும் அவர், பட்டத்து இளவரசர் ஷேக் முகமது பின் சயாத் அல் நஹ்யானுடன் பரஸ்பர நலன்களுக்கான இருதரப்பு, பிராந்தியம் மற்றும் சர்வதேச விவகாரங்கள் குறித்து பேச்சுவார்த்தை நடத்துகிறார். பிரதமர் மோடியின் இந்த பயணத்தின் போது அவருக்கு ‘ஆர்டர் ஆப் சயாத்’ விருது வழங்கப்படுகிறது.

Next Story