Begin typing your search above and press return to search.
பிரபல உலகத் தலைவர்கள் பட்டியலில் பிரதமர் மோடிக்கு முதல் இடம்
அமெரிக்காவைச் சேர்ந்த அரசியல் புலனாய்வு நிறுவனத்தால் நடத்தப்பட்ட கருத்துகணிப்பில் பிரபல உலக தலைவர்கள் பட்டியலில் பிரதமர் மோடிக்கு முதலிடம் கிடைத்துள்ளது
By : Karthiga
அமெரிக்காவைச் சேர்ந்த பிரபல அரசியல் புலனாய்வு நிறுவனம் 'மார்னிங் கன்சல்ட்' உலகத்தலைவர்கள் செல்வாக்கு தொடர்பாக கருத்துக்கணிப்பு ஒன்றை நடத்தியது.
கடந்த மாதம் 26 ஆம் தேதி தொடங்கி 31ஆம் தேதி வரையில் நடத்தப்பட்ட கருத்துக்கணிப்பின் முடிவு வெளியிடப்பட்டுள்ளது. இதில் உலகத்தில் மிகவும் விரும்பப்படுகிற பிரபல தலைவராக பிரதமர் மோடி தேர்வாகியுள்ளார் . அவருக்கு 78 சதவீதத்தினர் ஆதரவு உள்ளது.
அவரை தொடர்ந்து இரண்டாவது இடத்தை மெக்சிகோ அதிபர் ஆண்ட்ரஸ் மேனுவல் லோபஸ் ஓப்பரடார் பிடித்துள்ளார். இவருக்கு 68% ஆதரவு இருக்கிறது. அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடனுக்கு 40 சதவீத ஆதரவுடன் ஆறாவது இடம் கிடைத்துள்ளது. இந்த இடத்தை கனடா பிரதமர் ஜஸ்டின் பகிர்ந்து கொள்கிறார். இங்கிலாந்தின் பிரதமர் ரிஷிசுனக் 30 சதவீத ஆதரவுடன் பத்தாவது இடத்தில் உள்ளார்.
Next Story