Kathir News
Begin typing your search above and press return to search.

இஸ்ரேல் பிணை கைதிகள் விடுதலைக்கு பிரதமர் மோடி வரவேற்பு!

காசாவில் போர் நிறுத்தம் அறிவித்து இஸ்ரேல் பிணைக்கதிகள் விடுதலை செய்யப்பட உள்ளனர் என்ற செய்தியை வரவேற்கிறோம் என பிரதமர் மோடி கூறியுள்ளார்.

இஸ்ரேல் பிணை கைதிகள் விடுதலைக்கு பிரதமர் மோடி வரவேற்பு!

KarthigaBy : Karthiga

  |  23 Nov 2023 10:15 AM GMT

இந்தியா , அமெரிக்கா, ரஷியா, சீனா உள்ளிட்ட வளர்ந்த நாடுகளை அங்கமாக கொண்டுள்ள ஜி20 அமைப்பின் உச்சி மாநாடு கடந்த செப்டம்பர் மாதம் டெல்லியில் நடந்தது. இதன் தொடர்ச்சியாக ஜி 20 காணொளி மாநாடு நேற்று நடந்தது.இந்த மாநாட்டில் தொடக்க உரையாற்றிய பிரதமர் மோடி இஸ்ரேல் குறித்து கவலை தெரிவித்தார். அவர் தனது உரையி கூறியதாவது:-


பயங்கரவாதத்தை யாராலும் ஏற்றுக்கொள்ள முடியாது.நாம் ஒன்றுபடுவது எல்லா பிரச்சனைகளுக்கும் நாம் உணர்வு பூர்வமாக இருக்கிறோம் என்பதையும் அவற்றின் தீர்வுக்காக ஒன்றுபட்டு நிற்கிறோம் என்பதையும் காட்டுகிறது. பொதுமக்களின் மரணம் எங்கு நிகழ்ந்தாலும் அது கண்டிக்கத்தக்கது. இஸ்ரேல் பிணைக்கதிகள் விடுதலை செய்தியை வரவேற்கிறோம். அவர்கள் அனைவரும் விரைவில் விடுவிக்கப்படுவார்கள் என நம்புகிறோம்.


மனிதாபிமான உதவி சரியான நேரத்திலும் தொடர்ச்சியாகவும் சென்றடைவது அவசியம்.முதலாக மாறாமல் இருப்பதை உறுதி செய்வது முக்கியம். கடந்த ஆண்டு நவம்பர் 16-ஆம் தேதி தலைமை பொறுப்பை இந்தோனேஷிய அதிபர் ஜோகோ விடோட்டா என்னிடம் ஒப்படைத்தபோது உள்ளடக்கிய லட்சியமான செயல் சார்ந்த மற்றும் தீர்க்கமான அமைப்பாக ஜி 20 மாற்றம் என கூறியிருந்தேன். ஓராண்டில் அதை நாம் இணைந்தே அதை சாதித்து இருக்கிறோம்.


அவநம்பிக்கை மற்றும் சவால்கள் நிறைந்த இந்த உலகில் இந்த நம்பிக்கைதான் நம்மை ஒன்றாக இணைக்கிறது.கடந்த ஒரு வருடத்தில் ஒரே பூமி ஒரே குடும்பம் மற்றும் ஒரே எதிர்காலம் என்பதில் நாம் நம்பிக்கை தெரிவித்துள்ளோம் . சர்ச்சைகளில் இருந்து விலகி ஒற்றுமையோடும் ஒத்துழைப்போடும் பணியாற்றி வருகிறோம் .இவர் அவர் கூறினார்.


SOURCE :DAILY THANTHI

Next Story
கதிர் தொகுப்பு
Trending News