Kathir News
Begin typing your search above and press return to search.

ராமர் கோவில் கட்டுமான பணிகள் - பிரதமர் மோடி விரைவில் ஆய்வு

அயோத்திகள் பிரமாண்டமாக நடந்து வரும் ராமர் கோவில் கட்டுமான பணிகளை பிரதமர் மோடி விரைவில் ஆய்வு செய்ய உள்ளதாக கட்டுமான குழு தெரிவித்துள்ளது.

ராமர் கோவில் கட்டுமான பணிகள் - பிரதமர் மோடி விரைவில் ஆய்வு
X

KarthigaBy : Karthiga

  |  20 Oct 2022 10:45 AM GMT

உத்திரபிரதேசத்தின் அயோதியில் பிரமாண்டமான ராமர் கோவில் கட்டுமான பணிகள் நடந்து வருகின்றன. இந்த பணிகளை பிரதமர் மோடி கடந்த 2020 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 5ஆம் தேதி பூமி பூஜை உடன் தொடங்கி வைத்தார். அப்போது முதல் மின்னல் வேகத்தில் கட்டுமான பணிகள் நடந்து வருகின்றன. அடுத்த ஆண்டு டிசம்பர் மாதத்துக்குள் இந்த பணிகளை முடிக்க திட்டமிட்டு வேகமாக பணிகள் நடந்து வருகின்றன. இந்த கோவில் கட்டுமான பணிகளை மாநில முதல் மந்திரி யோகி ஆதித்யநாத் அடிக்கடி ஆய்வு செய்து வருகிறார். அத்துடன் கட்டுமான பணிகளில் ஈடுபட்டுள்ள ஊழியர்களுக்கு அவர் பல்வேறு ஆலோசனைகளையும் வழங்கி வருகிறார். இந்த நிலையில் பிரதமர் மோடியும் ராமர் கோவில் கட்டுமான பணிகளை ஆய்வு செய்ய இருப்பதாக கட்டுமான குழு தெரிவித்துள்ளது. கட்டுமான குழு தலைவர் நிரிபேந்திர மிஸ்ராவின் அலுவலகத்தில் இருந்து வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் ராமர் கோவில் கட்டுமான பணிகளை பிரதமர் மோடி விரைவில் பார்வையிடலாம் என குறிப்பிடப்பட்டுள்ளது.


கோவில் கட்டுமான பணிகள் திட்டமிட்டபடி நடந்து வருவதாகவும் 2023 ஆம் ஆண்டு டிசம்பருக்குள் ராமபிரானின் முன்பு பக்தர்கள் வேண்டுதல் செய்ய வாய்ப்பு ஏற்படும் எனவும் நம்பிக்கை தெரிவிக்கப்பட்டிருந்தது. கர்ப்ப கிரகம் மற்றும் ஐந்து மண்டபங்கள் அடங்கிய தரை தளத்துடன் மூன்று மாடி கொண்ட ராமர் கோவில் கட்டுமான பணிகள் முழு வீச்சில் நடந்து வருவதாக கூறியுள்ள கட்டுமான குழு அக்டோபர் முதல் வாரத்தில் பெய்த கனமழை காரணமாக பணிகள் பாதிக்கப்பட்டதாகவும் மீண்டும் தற்போது அது வேகம் எடுத்து இருப்பதாகவும் கூறியுள்ளது.






Next Story
கதிர் தொகுப்பு
Trending News