Kathir News
Begin typing your search above and press return to search.

பட்ஜெட் தாக்கலை முன்னிட்டு பொருளாதார நிபுணர்களுடன் பிரதமர் மோடி ஆலோசனை - 13ஆம் தேதி நடக்கிறது

பட்ஜெட் தாக்கலை முன்னிட்டு பொருளாதார நிபுணர்களுடன் பிரதமர் மோடி 13 ஆம் தேதி ஆலோசனை நடத்துகிறார்.

பட்ஜெட் தாக்கலை முன்னிட்டு பொருளாதார நிபுணர்களுடன் பிரதமர் மோடி ஆலோசனை - 13ஆம் தேதி நடக்கிறது

KarthigaBy : Karthiga

  |  10 Jan 2023 7:00 AM GMT

2023 - 24 ஆம் நிதி ஆண்டுக்கான மத்திய பட்ஜெட்டை நிதிமதிரி நிர்மலா சீதாராமன் அடுத்த மாதம் ஒன்றாம் தேதி நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்கிறார். இதை முன்னிட்டு நாட்டின் பொருளாதார நிலவரம் தொடர்பாக பொருளாதார நிபுணர்கள் நிதி ஆயோக்கின் துறை சார்ந்த வல்லுநர்களுடன் பிரதமர் மோடி வருகிற 13-ம் தேதி ஆலோசனை நடத்துகிறார்.


நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தி மற்றும் ஏற்றுமதி இறக்குமதி உள்ளிட்ட பல்வேறு துறைகள் தொடர்பான விவாதங்கள் இதில் இடம்பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதில் பல்வேறு மத்திய மந்திரிகளும் பங்கேற்பார்கள் என மத்திய அரசு வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.


இறுதி காலாண்டில் நாட்டின் பொருளாதார வளர்ச்சி வீதம் 7 சதவீதமாக குறையும் என மதிப்பிடப்பட்டுள்ளது இந்த சூழலில் பிரதமர் மோடியின் இந்த ஆலோசனை கூட்டம் முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது.






Next Story
கதிர் தொகுப்பு
Trending News