Kathir News
Begin typing your search above and press return to search.

இந்தியாவை வளர்ந்த நாடாக மாற்ற பிரதமர் மோடியின் அசத்தல் பேச்சும் அழைப்பும்!

அடுத்த 25 ஆண்டுகளில் இந்தியாவை வளர்ந்த நாடாக மாற்ற வேண்டும் என்று பொது மக்களுக்கு பிரதமர் மோடி அழைப்பு விடுத்துள்ளார்.

இந்தியாவை வளர்ந்த நாடாக மாற்ற பிரதமர் மோடியின் அசத்தல் பேச்சும் அழைப்பும்!

KarthigaBy : Karthiga

  |  1 Nov 2023 10:00 AM GMT

சர்தார் வல்லபாய் பட்டேல் பிறந்த நாளை ஒட்டி குஜராத் மாநிலம் நர்மதா மாவட்டம் கேவடியாவில் உள்ள பட்டியலின் பிரமாண்ட சிலை அருகே தேசிய ஒற்றுமை தின நிகழ்ச்சி நடந்தது. அதன் பிரதமர் மோடி பங்கேற்று படேல் சிலைக்கு மரியாதை செய்தார். பார்வையாளர்களுக்கு ஒற்றுமை உறுதிமொழி செய்து வைத்தார். எல்லை பாதுகாப்பு பணி, மாநில போலீஸ் பணி ஆகியவற்றின் தேசிய ஒற்றுமை தின அணிவகுப்பை பார்வையிட்டார். ரூபாய் 160 கோடி மதிப்பிலான திட்டங்களில் நிறைவடைந்த திட்டங்களை தொடங்கி வைத்தார். புதிய திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டினார். பின்னர் நிகழ்ச்சியில் பிரதமர் மோடி பேசியதாவது:-


சுதந்திரத்திற்கு முந்தைய 25 ஆண்டுகளில் நாட்டு மக்கள் சுதந்திரத்திற்காக போராடினர். அதுபோல அடுத்து வரும் 25 ஆண்டுகள் நாட்டுக்கு மிகவும் முக்கியமான காலகட்டம். இந்த காலகட்டத்தில் இந்தியாவை வளர்ந்த செழிப்பான நாடாக நாம் மாற்ற வேண்டும். அதற்கு சர்தார் வல்லபாய் பட்டேலின் வாழ்க்கையில் இருந்து உத்வேகம் பெற்று இதை சாதிக்க வேண்டும். நாட்டின் வளர்ச்சி பயணத்தில் சமரச அரசியல் முட்டுக்கட்டையாக இருக்கிறது. சமரச அரசியல் செய்பவர்கள் பயங்கரவாதத்தையோ அதன் தீமைகளையோ கண்டு கொள்வது இல்லை.


பயங்கரவாத விசாரணையில் மெத்தனமாக செயல்பட்டனர். மனிதர்களை எதிரிகளுடன் கைகோர்க்கவும் அவர்கள் தயங்க மாட்டார்கள். இத்தகைய போக்கு ஆபத்தானது. அவர்களிடம் மக்கள் உஷாராக இருக்க வேண்டும். நேர்மறை அரசியல் செய்யாத பெருமளவில் ஆன அரசியல் தலைவர்களுக்கு சுயநலமே முக்கியமானது. நாட்டின் ஒற்றுமை சீர்குலைந்தாலும் தங்கள் அரசியல் இலக்குகளை அடைய அவர்கள் முயற்சிக்கிறார்கள்.


கடந்த 9 ஆண்டுகளில் நாட்டு பாதுகாப்புக்கு பல்வேறு முனைகளில் இருந்தும் சவால்கள் வந்தன. பாதுகாப்பு படையினரின் கடின உழைப்பால் நாட்டின் எதிரிகள் முன்பு போல் தங்கள் சதிசெயல்களில் வெற்றி பெற முடியவில்லை. மக்கள் ஒரு காலத்தில் நெரிசலான இடங்களுக்கு செல்ல பயந்தனர்mஅந்த நிலைக்கு நாடு மீண்டும் செல்க்கூடாது. 370-வது பிரிவு இணைக்கப்படும் என்று யாராவது நினைத்திருப்பார்களா? ஆனால் இன்று காஷ்மீருக்கும் நாட்டுக்கும் இடையில் என 370-வது பிரிவு என்ற சுவர் இடிக்கப்பட்டு விட்டது.


சர்தார் பட்டேல் எங்கிருந்தாலும் இதனை கண்டு மகிழ்ச்சி அடைந்து நம்மை ஆசீர்வதிப்பார். இன்று ஒட்டுமொத்த உலகமும் இந்தியாவின் சாதனைகளை பார்த்துக் கொண்டுள்ளது. ஜி - 20 மாநாட்டில் இந்தியாவின் திறமையை ஆச்சரியத்துடன் பார்த்தனர். நமது எல்லைகள் பாதுகாப்பாக உள்ளன. 13 கோடி பேர் வறுமையில் இருந்து விடுவிக்கப்பட்டுள்ளனர். இன்னும் சில ஆண்டுகளில் பொருளாதாரத்தில் உலகத்திலேயே மூன்றாவது இடத்தை இந்தியா அடையும். சவால்களை ஒன்றன்பின் ஒன்றாக சமாளித்து வருகிறோம். நாட்டின் நிலையை தன்மையை பாதிக்கக்கூடிய எந்த காரியத்தையும் யாரும் செய்யக்கூடாது. 140 கோடி மக்களின் கடின உழைப்பு வீணாக விடக்கூடாது. இவ்வாறு அவர் பேசினார்.


SOURCE :DAILY THANTHI

Next Story
கதிர் தொகுப்பு
Trending News