10 லட்சம் வாக்குச்சாவடிகளைச் சேர்ந்த பா.ஜ.க ஊழியர்கள் இடையே காணொளி காட்சி மூலம் பிரதமர் மோடி உரை! எப்போ தெரியுமா?
நாடு முழுவதும் பத்து லட்சம் வாக்குச்சாவடிகளை சேர்ந்த பா. ஜனதா ஊழியர்களிடையே பிரதமர் மோடி 27- ஆம் தேதி காணொளி காட்சி மூலம் பேசுகிறார்.
By : Karthiga
மத்திய பிரதேச மாநிலத்தில் சிவராஜ் சிங் சௌகான் தலைமையில் பா.ஜனதா ஆட்சி நடந்து வருகிறது. அங்கு இந்த ஆண்டு இறுதியில் சட்டசபை தேர்தல் நடக்கிறது. இந்நிலையில் பிரதமர் மோடி இந்த மாதம் 27 - ஆம் தேதி மத்திய பிரதேச தலைநகர் போபாலுக்கு செல்கிறார். அங்கு வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் ரயில் போக்குவரத்தை கொடியசைத்து தொடங்கி வைக்கிறார். பின்னர் வாக்கு சாவடிகளை சேர்ந்த பா. ஜனதா ஊழியர்கள் இடையே பிரதமர் மோடி பேசுகிறார். இது குறித்து மதிப்பிரதேச மாநில பா. ஜனதா தலைவர்வி.டி சர்மா கூறியதாவது:-
நாடு முழுவதும் 10 லட்சம் வாக்கு சாவடிகளைச் சேர்ந்த பா.ஜனதாவினர் மற்றும் பா.ஜ.க தலைவர்கள் இடையே பிரதமர் மோடி போபாலில் இருந்து காணொளி காட்சி மூலம் உரையாற்றுகிறார் . பல்வேறு மாநிலங்களைச் சேர்ந்த சுமார் 2500 பா ஜனதா தலைவர்கள் அதில் பங்கே இருக்கிறார்கள் .
அதுபோல் மத்திய பிரதேசத்தில் 64 ஆயிரத்து 100 வாக்குச் சாவடிகளை சேர்ந்த 38 லட்சம் பா. ஜனதாவினர் கலந்து கொள்கிறார்கள். பிரதமர் மோடி அனுமதித்தால் போபாலில் வாகன பேரணியும் நடத்தப்படும். அவர் தார்பகுதிக்கும் செல்கிறார். இவ்வாறு அவர் கூறினார்.