திடீரென மருத்துவமனையில் அனுமதி - என்ன ஆச்சு பிரதமரின் தாயாருக்கு?
திடீர் உடல்நலக் குறைவு காரணமாக பிரதமர் மோடியின் தாயார் ஹீராபென் மோடி அகமதாபாத்தில் உள்ள ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டுள்ளார். அவரை பிரதமர் மோடி நேரில் வந்து பார்த்தார்
By : Karthiga
பிரதமர் மோடியின் தாயார் ஹீராபென் மோடி. இவர் குஜராத் மாநிலம் காந்திநகர் ரேசானில் பிருந்தாவன் சொசைட்டி பகுதியில் அமைந்துள்ள தனது இளைய மகன் பங்கஜ் மோடியின் இல்லத்தில் வசித்து வந்தார். இந்த நிலையில் அவரது உடல்நிலை திடீரென பாதிக்கப்பட்டது. இதை அடுத்து நேற்று அவர் அகமதாபாத்தில் உள்ள யு.என் மேத்தா இதய நோய் ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டார். இது குறித்து அந்த ஆஸ்பத்திரி சார்பில் வெளியிடப்பட்ட அறிக்கையில் பிரதமரின் தாயார் அகமதாபாத் யயு.என். மேத்தா இதய நோய் ஆஸ்பத்திரி மற்றும் ஆராய்ச்சி மையத்தில் சேர்க்கப்பட்டுள்ளார். அவரது உடல்நிலை சீராக உள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து தகவல் அறிந்ததும் பிரதமர் மோடி நேற்று மதியம் ஆமதாபாத்துக்கு விரைந்தார். விமான நிலையத்திலிருந்து நேராக அவர் தாயார் சேர்க்கப்பட்டுள்ள ஆஸ்பத்திரிக்கு காரில் வந்தார்.
அங்கு அவர் தாயாரை பார்த்தார். அங்கிருந்து டாக்டர்களிடம் தாயாரின் உடல்நிலை குறித்தும் அவருக்கு அளிக்கப்படுகிற சிகிச்சை பற்றி விசாரித்து அறிந்தார்.அங்கு அவர் ஒரு மணி நேரம் இருந்தார். பின்னர் அவர் புறப்பட்டு சென்றார். அப்போது ஆஸ்பத்திரி முன்பாக கூடியிருந்த கூட்டத்தினரையும் பத்திரிகையாளர்களை பார்த்து கைகளை கூப்பி வணக்கம் தெரிவித்துவிட்டு சென்றார். இன்னும் ஒன்றல்ல இரு நாளில் ஆஸ்பத்திரியில் இருந்து டிஸ்ஜார்ஜ் செய்து வீட்டுக்கு அனுப்பி வைக்கப்பட்டு விடுவார் என பா.ஜ.க எம்.பி ஜுகல்ஜிஜி தாக்கூர் தெரிவித்தார்.