Kathir News
Begin typing your search above and press return to search.

இந்தியராய் 'கெத்துகாட்ட' இணையத்தில் நாம் செய்ய வேண்டியவையாக பிரதமர் மோடி விடுத்த வேண்டுகோள்

சுதந்திர தினத்தை முன்னிட்டு சமூக வலைதள முகப்பு படங்களில் தேசியக்கொடி வைக்க பிரதமர் மோடி வேண்டுகோள் விடுத்துள்ளார்.

இந்தியராய் கெத்துகாட்ட இணையத்தில் நாம் செய்ய வேண்டியவையாக பிரதமர் மோடி விடுத்த வேண்டுகோள்

KarthigaBy : Karthiga

  |  14 Aug 2023 5:15 AM GMT

நாடு முழுவதும் நாளை 76- வது சுதந்திர தின விழா கொண்டாடப்படுகிறது. இதை ஒட்டி மொத்த நாடும் விழாக்கோலம் கொண்டுள்ளது. முன்னதாக கடந்த மாத இறுதியில் ஒளிபரப்பான மனதின் குரல் நிகழ்ச்சியில் பேசிய பிரதமர் மோடி வீடுகள் தோறும் தேசியக்கொடி என்ற இயக்கத்தின் கீழ் 13ம் தேதி முதல் 15ஆம் தேதி வரை மக்கள் தங்கள் வீடுகளில் தேசிய கொடி ஏற்ற வேண்டும் என அழைப்பு விடுத்தார்.


அத்துடன் 'எண்மண், என் தேசம் என்ற இயக்கத்தின் கீழ் அவரவர் பகுதியில் தேசத்தின் புனித மண்ணை கையில் இருந்து செல்பி படம் எடுத்து இணையத்தில் பதிவேற்றம் செய்யவும் கேட்டுக்கொண்டார். இந்த நிலையில் சுதந்திர தினத்தை முன்னிட்டு பிரதமர் மோடி தனது சமூக வலைதள கணக்குகளில் முகப்பு படத்தை தேசிய கொடியாக மாற்றியுள்ளார். மேலும் 'வீடுகள் தோறும் தேசியக்கொடி' இயக்கத்தின் ஒரு பகுதியாக மக்களும் தங்களது சமூக வலைதள கணக்குகளின் முகப்பு படங்களை தேசியக்கொடியாக மாற்ற வலியுறுத்தியுள்ளார் .


இது தொடர்பாக அவர் டுவிட்டரில் வெளியிட்டுள்ள பதிவில் 'வீடுகள் தோறும் தேசியக்கொடி' இயக்கத்தின் உணர்வோடு நமது சமூக வலைதள கணக்குகளின் முகப்பு படத்தை தேசியக் கொடியாக மாற்றி நமது அன்புக்குரிய நாட்டுக்கும் நமக்கும் இடையிலான பிணைப்பை ஆழப்படுத்தும் இந்த தனித்துவமான முயற்சிக்கு ஆதரவளிப்போம் என்று குறிப்பிட்டுள்ளார்.


SOURCE :DAILY THANTHI

Next Story
கதிர் தொகுப்பு
Trending News