Kathir News
Begin typing your search above and press return to search.

ராமர் கோவில் கும்பாபிஷேகம் தடையின்றி நடைபெற வேண்டி தனுஷ்கோடி கடலிலும் கோதண்ட ராமர் கோவிலிலும் பிரதமர் மோடி செய்த சிறப்பு வழிபாடு!

அயோதியில் ராமர் கோவில் கும்பாபிஷேகம் சிறப்பாக நடைபெற வேண்டி பிரதமர் மோடி கோதண்டராமர் கோவிலில் சிறப்பு வழிபாடு பூஜைகள் செய்தார்.

ராமர் கோவில் கும்பாபிஷேகம் தடையின்றி நடைபெற வேண்டி தனுஷ்கோடி கடலிலும் கோதண்ட ராமர் கோவிலிலும் பிரதமர் மோடி செய்த சிறப்பு வழிபாடு!
X

KarthigaBy : Karthiga

  |  22 Jan 2024 10:15 AM GMT

ராமநாதபுரம் மாவட்டம் ராமேஸ்வரம் ராமநாதசாமி கோவிலில் சாமி தரிசனம் செய்வதற்கு நேற்று முன்தினம் பிரதமர் நரேந்திர மோடி இராமேஸ்வரம் வந்தார்.. கோவிலில் சாமி தரிசனம் செய்த பின்னர் மேற்குரத வீதி அருகே உள்ள ராமகிருஷ்ண மடத்தில் இரவு தங்கினார். ராமேஸ்வரம் அருகே உள்ள தனுஷ்கோடி செல்வதற்காக நேற்று காலை ராமகிருஷ்ண மடத்திலிருந்து காலை 8.05 மணிக்கு காரில் புறப்பட்டார். 9:30 மணிக்கு அரிச்சல் முனை கடற்கரை வந்த பிரதமர் நரேந்திர மோடி சாலை வளைவில் உள்ள அசோகா சக்கரம் பொருத்தப்பட்ட நினைவுத் உனக்கு புதுவி சல்யூட் அடித்த மரியாதை செலுத்தினார்.


தொடர்ந்து அங்கு அமைக்கப்பட்டிருந்த தொலைநோக்கி மூலம் கடல் பகுதியை பார்வையிட்டார். பின்னர் சாலை வளைவில் நடந்தபடி கடற்கரை அழகை பார்த்து ரசித்தார். இதைத் தொடர்ந்து பிரதமர் நரேந்திர மோடி கடற்கரையில் இன்று 11 கூடைகளில் இருந்த 11 விதமான பூக்களை கடற்கரை மணல் பரப்பில் தூவி மரியாதை செலுத்தினார். மேலும் கடலில் இறங்கி நின்று கடல் நீரை இரண்டு கைகளில் எடுத்து அதை சங்கல்ப பூஜை செய்வது போல் மீண்டும் கடலிலேயே ஊற்றி வழிபாடு செய்தார். பின்னர் அங்கு அமைக்கப்பட்டிருந்த இருக்கையில் சிறிது நேரம் கண்களை மூடியபடி தியானம் செய்தார். தொடர்ந்து கடற்கரையில் சிறிது தூரம் நடந்து சென்றார்.


காலை 10 மணியளவில் அங்கிருந்து கார் மூலமாக தனுஷ்கோடி கோதண்டராமர் கோவிலுக்கு புறப்பட்டார் காலை 10:25 மணி அளவில் கோதண்ட ராமர் கோவிலை வந்தடைந்தார்.பின்னர் வேட்டி துண்டை அணிந்து கங்கை தீர்த்த கலசம் வைக்கப்பட்டிருந்த இடத்தில் பிரதமர் அமர்ந்தார். தொடர்ந்து கோவிலின் குழுக்கள் வேத மந்திரங்கள் முழங்க பூஜைகளை தொடங்கினார். அரை மணி நேரத்திற்கு மேலாக கலச பூஜை அபிஷேகம் நடைபெற்றது.


உலக நன்மைக்காகவும் அயோத்தி ராமர் கோவில் பிரதிஷ்டை விழா எந்த இடையூறும் இல்லாமல் சிறப்பாக நடைபெற வேண்டியும் பிரதமர் நரேந்திர மோடி தனுஷ்கோடி கோதண்ட ராமர் கோவிலில் கங்கை தீர்த்தம் அடங்கிய கலசம் வைத்து கலச பூஜை செய்து தரிசனம் செய்ததாக கூறப்படுகிறது. இதே போல் மற்றொரு பதிவில் புகழ்பெற்ற கோதண்டராமர் கோவிலில் வழிபாடும் மேற்கொண்டேன். மிகவும் ஆசீர்வதிக்கப்பட்டதாக உணர்ந்தேன் என கூறியுள்ளார்.


SOURCE :DAILY THANTHI

Next Story
கதிர் தொகுப்பு
Trending News