Kathir News
Begin typing your search above and press return to search.

பிரதமர் மோடியின் தமிழக சுற்றுப்பயணமும் சூறாவளி பிரச்சாரமும்!

பிரதமர் மோடி ஏப்ரல் 9 ,10 தேதிகளில் தமிழ்நாட்டிற்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ள இருக்கிறார்.

பிரதமர் மோடியின் தமிழக சுற்றுப்பயணமும் சூறாவளி பிரச்சாரமும்!
X

KarthigaBy : Karthiga

  |  7 April 2024 12:44 PM GMT

பிரதமர் நரேந்திர மோடி இரண்டு நாள் பயணமாக ஏப்ரல் 9 ,10 ஆகிய தேதிகளில் தமிழகம் வருகிறார். மக்களவைத் தேர்தலில் முதல் கட்ட வாக்குப் பதிவை எதிர்கொள்ளும் தமிழ்நாட்டில் இது பிரதமர் மேற்கொள்ளும் இறுதிக்கட்ட பிரச்சாரமாக அமையும் என கருதப்படுகிறது. பிரதமரின் வருகை சுற்றுப்பயணம் மற்றும் பாதுகாப்பு ஏற்பாடுகள் தொடர்பாக ஏற்கனவே சென்னை, வேலூர், பொள்ளாச்சி ஆகிய இடங்களில் மாவட்ட நிர்வாகங்கள் காவல்துறை உயர் அதிகாரிகள் ஆகியோருடன் மத்திய மாநில அரசின் உயர் அதிகாரிகள் ஆலோசனை நடத்தினர் .

அவரது பயணத்தின் உத்தேச நிகழ்ச்சி நிரல் வெளியாகியுள்ளது. அதன்படி ஏப்ரல் ஒன்பதாம் தேதி மாலை 4 மணி அளவில் மகாராஷ்டிராத்தின் கோண்டியாவிலிருந்து விமானப்படை விமான மூலம் புறப்படும் பிரதமர் மாலை 4 .10 மணிக்கு சென்னைக்கு வருகிறார். விமான நிலையத்திலிருந்து சாலை மார்க்கமாக ஆளுநர் மாளிகை வரை அமைந்துள்ள கிண்டி வரை மக்களைச் சந்தித்தவாறு பிரதமர் செல்வதற்கான ஏற்பாடுகள் திட்டமிடப்பட்டுள்ளன.

இதைத்தொடர்ந்து ஆளுநர் மாளிகையில் ஒன்பதாம் தேதி இரவு தங்கும் பிரதமர் பத்தாம் தேதி காலையில் மீண்டும் விமான நிலையம் செல்கிறார் .அங்கிருந்து காலை 9:20 மணிக்கு ஹெலிகாப்டர் மூலம் வேலூருக்கு புறப்படும் பிரதமர் 10.10 மணியளவில் தரையிறங்கியதும் சாலை மார்க்கமாக காலை 10 .15 மணியளவில் வேலூர் கோட்டை பகுதியில் உள்ள மைதானத்தில் பாஜக பொதுக்கூட்டத்தில் பங்கேற்று பேசவிருக்கிறார் .பின்னர் முற்பகல் 11.15 மணியளவில் மீண்டும் ஹெலிகாப்டர் தளத்துக்கு வந்து விமானப்படை விமானத்துக்கு மாறி 11:50 மணி அளவில் கோவைக்கு புறப்படுகிறார். கோவை விமான நிலையத்தில் தரையிறங்கியதும் ஹெலிபாடுக்கு சென்று ஹெலிகாப்டர் மூலம் பொள்ளாச்சிக்கு பகல் 1:25 மணியளவில் புறப்பட்டு ஐந்து நிமிடங்களில் பொள்ளாச்சி சென்றடைவார் .

அங்கிருந்து பிரதமர் பங்கேற்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ள தேசிய ஜனநாயக கூட்டணி பொதுக்கூட்டத்தில் கலந்து கொண்டு பேசுகிறார். இதை அடுத்து பிற்பகல் 3 மணியளவில் பொள்ளாச்சியில் இருந்து ஹெலிகாப்டரில் கோவைக்கு வருகிறார். பின்னர் பிற்பகல் 3.05 மணி அளவில் விமானப்படை மூலம் மகாராஷ்டிராவில் நாகபுரிக்கு செல்லும் வகையில் அவரது பயணத்திட்டம் தயாரிக்கப்பட்டிருக்கிறது.


SOURCE :Dinaseithi

Next Story
கதிர் தொகுப்பு
Trending News