பிரதமர் மோடி வருகையால் முன்பை விட இந்தியா அமெரிக்க உறவு வலிமை அடைந்துள்ளது: ஜோபைடன் அரசு உயர் அதிகாரி புகழாரம்
பிரதமர் மோடி வருகையால் முன்பை விட இந்தியா அமெரிக்க உறவு வலிமை அடைந்துள்ளது எஎன ஜோபைடன் அரசு உயர் அதிகாரி கூறியுள்ளார்.
By : Karthiga
அமெரிக்க ஜனாதிபதி ஜோபைடன் அழைப்பின் பேரில் கடந்த மாதம் 21- ஆம் தேதி முதல் 23- ஆம் தேதி வரை பிரதமர் மோடி அமெரிக்க பயணம் மேற்கொண்டார். மூன்று நாட்களும் ஜோ பைடனை சந்தித்தார். குறிப்பாக 22ஆம் தேதி இருவரும் எட்டு மணி நேரத்திற்கு மேல் ஒரே இடத்தில் இருந்தனர். இந்நிலையில் பிரதமர் மோடி பயணம் குறித்து ஜோபைடன் அரசின் உயர் அதிகாரி ஒருவர் பேட்டியளித்துள்ளார். அவர் கூறியதாவது :-
பிரதமர் மோடியின் அமெரிக்க பயணத்துக்கு பிறகு இந்திய அமெரிக்க உறவு முன்பை விட வலிமை அடைந்துள்ளது. இது போன்ற பயணம் ஜனாதிபதியின் நினைவில் எப்போதும் இடம் பெற்றது இல்லை. ஜோபைடன் பிரதமர் மோடி பேச்சு வார்த்தையில் பெரும்பகுதி சீனா பற்றியதாகத்தான் இருந்தது .சீன அதிபர் ஜின் பிங்குடனான அனுபவங்கள் அவருடன் ஏற்பட்ட அறிமுகம் போன்றவை பற்றியும் பேசினார். சீனாவை கையாள்வதில் அமெரிக்க காவி விட இந்தியா ஒரு படி முன்னாள் இருக்கிறது.
டிக் டாக்கை தடை செய்வது, சீன உபகரணங்கள் இல்லாமல் மொபைல் நெட்வொர்க்கை உருவாக்குவது என இந்தியா முன் உதாரணமாக இருக்கிறது. எனவே எங்களுக்கு இந்தியா மிகவும் முக்கியம். அதே சமயத்தில் எங்களைப் போலவே எண்ணற்ற சீன விஷயங்களை இன்னும் இந்தியா சார்ந்துள்ளது. சீனா எரிச்சல் ஊட்டும் நாடாக இருக்கிறது. இந்தியாவில் சில கருத்துக்கணிப்புகளில் பிரதமர் மோடியின் புகழ் 80 சதவீதம் உள்ளது. அமெரிக்காவின் புகழும் அப்படித்தான்.
15 ஆண்டுகளுக்கு முன்பு பார்த்தால் சீனா எண்ணற்ற ஏழைகளை நடுத்தர குடும்பங்களாக உயர்த்தியது. சீனா அப்போது இயங்கிய வேகத்தை விட இந்தியா அதிக வேகத்தில் செயல்படுகிறது. முதலீடுகளும் அதிகமாக உள்ளது .அமெரிக்காவின் மிகப்பெரிய வர்த்தக கூட்டாளி ஆக இந்தியா திகழ்கிறது. அமெரிக்கா கொண்டுள்ள உறவுகளில் இந்தியாவுடன் ஆன உறவு மிகவும் முக்கியமானது என்று ஜோபைடன் ஏற்கவே கூறியுள்ளார். இவ்வாறு ஜோபைடன் அரசு உயர் அதிகாரி கூறினார்.
SOURCE :DAILY THANTHI