Kathir News
Begin typing your search above and press return to search.

'பிரதமர் மோடி அலை தமிழ்நாட்டில் சூறாவளியாக எழும் சுனாமியாக எதிர்க்கட்சிகளை சுருட்டி போடும்'- மத்திய மந்திரி எல்.முருகன்!

தமிழ் மீதும் தமிழக மக்கள் மீதும் பேரன்பு கொண்டவர் பிரதமர் நரேந்திர மோடி. மோடி குறித்து எல்.முருகன் கூறிய தகவல்கள்

பிரதமர் மோடி அலை தமிழ்நாட்டில் சூறாவளியாக எழும் சுனாமியாக எதிர்க்கட்சிகளை சுருட்டி போடும்- மத்திய மந்திரி எல்.முருகன்!

KarthigaBy : Karthiga

  |  9 Jan 2024 5:15 AM GMT

தமிழ் மீதும் தமிழக மக்கள் மீதும் பேரன்பு கொண்ட பிரதமர் நரேந்திர மோடி , தமிழ் மொழியின் பெருமைகளையும் திருக்குறளின் சிறப்பையும் உலகம் அறியச் செய்து வருபவர். '.சுதந்திர தின உரையில் 'நீரின்றி அமையாது உலகு' என்ற குறளை மேற்கோள் காட்டியதையும் தேசிய ஒற்றுமை தினத்தன்று 'மன்னும் இமயமலை எங்கள் மலையே! மாநில மீதிது போற்பிரிதிலையே! என்ற பாரதியாரின் பாடலை பாடி ஒற்றுமையின் மகத்துவத்தை பறைசாற்றியதையும் தமிழக மக்கள் எப்போதும் நினைவில் வைத்திருப்பர்.


லடாக்கில் 'மறமானம் மாண்ட' என்ற குரலை சுட்டிக்காட்டி ராணுவ வீரர்களுக்கு பிரதமர் மோடி ஊக்கமளித்தார். ஐக்கிய நாடுகள் சபையில் புறநானூற்று பாடலை சுட்டிக்காட்டி தமிழை தலைநிமிரச் செய்ததும் என்றென்றும் நம் நினைவில் நிழலாடுகிறது. தமிழ் மீது மட்டுமல்ல தமிழக மக்கள் மீதும் மாறாத பாசத்தையும் அன்பையும் பொழிபவர். கடந்த 9 ஆண்டுகளில் இதுவரை இல்லாத அளவில் மக்கள் நலத்திட்டங்களை அவர் தமிழகத்திற்கு கொண்டு வந்து சேர்த்து உள்ளார்.


அவர் எண்ணத்திலும் செயலிலும் தமிழக மக்களின் நலனுக்காக திட்டங்கள் எப்போதும் இருக்கும். அந்த வகையில் கடந்த ஜனவரி 2-ஆம் தேதி திருச்சிக்கு வந்த பாரதிதாசன் பல்கலைக்கழக பட்டமளிப்பு விழாவில் பங்கேற்றத்துடன் திருச்சி விமான நிலையத்தின் புதிய நிலையத்தையும் திறந்து வைத்து உரையாற்றினார். தொடர்ந்து 19,1850 கோடி மதிப்பில் ஆன புதிய திட்டங்களையும் தொடங்கி வைத்தார் .


சேலம் - மேட்டூர் இரட்டை ரயில் பாதை, மதுரை -தூத்துக்குடி இரட்டை இரயில் பாதை ,திருச்சி - மானாமதுரை விருதுநகர் - மின்மயமாக்கப்பட்ட ரயில் பாதை , விருதுநகர் - தென்காசி மற்றும் செங்கோட்டை- திருச்செந்தூர் மின்மயமாக்கப்பட்ட ரயில் பாதைகளை தொடங்கி வைத்தார். அதோடு திருச்சி- கல்லகம் தேசிய நெடுஞ்சாலை, காரைக்குடி- ராமநாதபுரம் இருவழிச் சாலை , சேலம் - வாணியம்பாடி நான்கு வழிச்சாலை திட்டங்களையும் நாட்டுக்கு அர்ப்பணித்தார். எண்ணூர்- காமராஜர் துறைமுகத்தின் பொது சரக்கு கப்பல் நிறுத்துமிடம், ரூபாய் 9000 கோடி மதிப்பிலான பெட்ரோலியம் மற்றும் இயற்கை திட்டங்களையும் நாட்டுக்கு அர்ப்பணித்தார். இது மட்டுமின்றி சாலை திட்டங்கள் மட்டுமின்றி பல்வேறு திட்டங்களுக்கும் அடிக்கல் நாட்டினார்.


திருச்சி விழாவில் பிரதமர் மோடி பேசும்போது கடந்த 10 ஆண்டுகளில் மூன்று மடங்கு அதிகமாக தமிழகத்திற்கு மத்திய அரசு நிதி வழங்கியிருக்கிறது என்பதை தெள்ளத்தெளிவாக கூறியுள்ளார். தேமுதிக தலைவர் விஜயகாந்த் குறித்த இரங்கலை பதிவு செய்தவுடன் நினைவலைகளையும் நம்முடன் பகிர்ந்து கொண்டார். சினிமா மட்டுமல்ல அரசியலிலும் விஜயகாந்த் ஒரு கேப்டன் என்பதையும் தேசத்தை அதிகம் நேசித்தவர் என்பதையும் பிரதமர் மோடி சுட்டி காட்டினார் .மேலும் விஜயகாந்த் குறித்து நாளிதழ்களுக்கு கட்டுரை எழுதி புகழஞ்சலியும் செலுத்தினார்.


2014 ஆம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தலின் போது விஜயகாந்த் தேசிய ஜனநாயக கூட்டணியுடன் இணைந்து 18.5 சதவீதத்திற்கும் அதிகமான வாக்குகளை பெற்றதையும் யாரும் மறக்க முடியாது. இதனையும் பிரதமர் மோடி நம்மிடையே பகிர்ந்தார் .பிரதமர் மோடி தமிழகத்திற்கு வந்திருந்தது தமிழக மக்கள் அனைவரையும் உற்சாகத்தில் ஆழ்த்தியது. அந்தக் கூட்டத்தில் மற்றவர்கள் பேசும்போது கூட மோடி மோடி என மக்கள் ஆர்ப்பரித்தனர். இதன் மூலம் தமிழ்நாட்டில் அவரது பயணம் என்ன தாக்கத்தை ஏற்படுத்தி இருக்கிறது என்பதை அனைவரும் புரிந்துகொள்ள முடியும். இது இதோட நிற்கப்போவதில்லை. 2024 நாடாளுமன்ற தேர்தல் காலத்திலும் பிரதமர் மோடி தலைமையில் பா.ஜனதா பெரும் தாக்கத்தை ஏற்படுத்தும்.


இந்த தேர்தலில் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி நாடு முழுவதும் பெரும்பான்மையான இடங்களில் இடங்களில் வெற்றி பெற்று தமிழகமம் மற்றும் புதுச்சேரியில் 40 தொகுதிகளிலும் மகத்தான வெற்றி பெற்று மக்கள் போற்றும் பாசத்துக்குரிய தலைவர் மோடி மீண்டும் பிரதமராக பதவி ஏற்பது உறுதி.தமிழ்நாடு முழுவதும் வீசும் மோடி அலை தமிழகத்தில் சூறாவளியாக எழுந்து சுனாமியாக எதிர்க்கட்சிகளை சுருட்டி போடும். ஏழை எளிய மக்களின் வளர்ச்சியை குறிக்கோளாக கொண்டு செயல்பட்டு வரும் பிரதமர் மோடியின் பொற்கால ஆட்சி மீண்டும் அமையும். தமிழகத்தில் தொடர்ந்து மக்கள் நலத்திட்டங்களை செயல்படுத்தி நமது மாநிலம் பழைய பெருமைகளை மீட்டெடுத்து புதிய உச்சத்தை தொடுவதும் உறுதி. இவ்வாறு மதியமுந்திரி எல்.முருகன் கூறியுள்ளார்.


SOURCE :DAILY THANTHI

Next Story
கதிர் தொகுப்பு
Trending News