Kathir News
Begin typing your search above and press return to search.

பிரிக்ஸ் மாநாட்டில் கூட்டு புகைப்படம் எடுக்க வந்தபோது நெகிழச் செய்த பிரதமரின் செயல்: இப்படியும் கூட ஒரு தலைவரா?

சர்வதேச சவால்களுக்கு தீர்வு காண்பது பற்றி பிரிக்ஸ் நாட்டு தலைவர்களுடன் பிரதமர் மோடி ஆலோசனை நடத்தினார்.

பிரிக்ஸ் மாநாட்டில் கூட்டு புகைப்படம் எடுக்க வந்தபோது நெகிழச் செய்த பிரதமரின் செயல்: இப்படியும் கூட ஒரு தலைவரா?

KarthigaBy : Karthiga

  |  24 Aug 2023 11:00 AM GMT

பிரேசில், ரஷ்யா, சீனா , இந்தியா தென்னாப்பிரிக்கா இந்த நாடுகள் உள்ளடக்கிய பிரிக்ஸ் மாநாடு நேற்று முன்தினம் தென்னாப்பிரிக்க நாட்டின் ஜோகன்னஸ்பர்க் நகரில் தொடங்கியது. இது மூன்று நாள் மாநாடு ஆகும். கொரோனா காரணமாக மூன்று ஆண்டுகளுக்குப் பிறகு நேரடி நிகழ்வாக மாநாடு நடக்கிறது. தென்னாபிரிக்க அதிபர் சீ.சிறில் ரமாபோசா அழைப்பின் பேரில் மாநாட்டில் பங்கேற்க பிரதமர் மோடி நேற்று முன்தினம் தென்னாப்பிரிக்கா சென்றார் .அவரை அந்நாட்டு துணை அதிபர் வரவேற்றார். மோடிக்கு அணிவகுப்பு மரியாதை அளிக்கப்பட்டது. பின்னர் பிரிக்ஸ் வர்த்தக கூட்டமைப்பு தலைவர்கள் கூட்டத்தில் பிரதமர் மோடி பங்கேற்றார். அதில் அவர் பேசியதாவது:-


இந்தியாவில் செய்யப்பட்ட மாபெரும் சீர்திருத்தங்கள் அங்கு வர்த்தகம் செய்ய உகந்த சூழ்நிலையை ஏற்படுத்தி உள்ளன. எனவே இங்குள்ள வர்த்தக நிறுவனங்கள் இந்தியாவின் வளர்ச்சி பயணத்தில் இணைய வேண்டும். இந்தியா விரைவில் ரூபாய் 410 லட்சம் கோடி பொருளாதாரமாக மாறும். உலகத்தின் வளர்ச்சி என்ஜினாக உருமாறும்.'பிரீக்ஸ்' நாடுகள் அனைத்தும் விரைவில் இந்தியாவின் யு.பி.ஐ சேவையை பயன்படுத்த வாய்ப்புள்ளது. அத்துடன் பிரிக்ஸ் நாடுகள் சென்று உலக நலனுக்காக குறிப்பாக தெற்குலக நாடுகளின் நலனுக்கு பாடுபட முடியும். இவ்வாறு அவர் பேசினார்.


பிரிக்ஸ் நாட்டு தலைவர்களிடையே முக்கிய சந்திப்பு நடந்தது. அதில் சீனா, தென்னாப்பிரிக்கா , பிரேசில், ஆகிய நாடுகளின் தலைவர்களுடன் பிரதமர் மோடி பங்கேற்றார். பிரிக்ஸ் மாநாட்டு மேடையில் தலைவர்கள் கூட்டு புகைப்படம் எடுக்க வந்த போது பிரதமர் மோடி நிற்க வேண்டிய இடத்தில் இந்திய தேசியக்கொடி பதிக்கப்பட்டு இருந்தது. அதன் மீது நிற்பதை தவிர்க்க எண்ணிய பிரதமர் அந்த கொடியை குனிந்து எடுத்து தனது சட்டைப் பையில் வைத்துக்கொண்டார். அருகில் தென் ஆப்பிரிக்கா அதிபர் சிறில்ரமாபோசா போசா அதனை வியப்புடன் பார்த்து நெகிழ்ந்தார்.


SOURCE :DAILY THANTHI

Next Story
கதிர் தொகுப்பு
Trending News