'தோல்விக்கு அஞ்சி ஓடும் காங்கிரஸின் இளவரசர்' - பிரதமர் மோடி!
காங்கிரசின் இளவரசர் ஆன ராகுல் காந்தி அமேதி தொகுதியை விட்டு ஓடுகிறார் என்று பிரதமர் மோடி விமர்சனம் செய்துள்ளார்.
By : Karthiga
ராகுல் காந்தி தேர்தல் தோல்விக்கு அஞ்சி ஓடுவதாக பிரதமர் மோடி விமர்சித்துள்ளார் .மேலும் மக்களவை தேர்தலில் காங்கிரஸ் கட்சி இதுவரை இல்லாத அளவில் தோல்வி அடையும் என்றும் அவர் கூறினார். மேற்கு வங்கத்தில் பிரச்சார கூட்டத்தில் பிரதமர் மோடி இது குறித்து பேசியதில் தற்போதைய மக்களவைத் தேர்தலில் கருத்துக்கணிப்புகளோ வாக்கு கணிப்புகளோ எதுவும் தேவையில்லை.
ஏனெனில் காங்கிரஸ் தனது தோல்வியை முன்பே ஒப்புக்கொண்டுவிட்டது. கட்சியின் மூத்த தலைவர் மக்களவை தேர்தலில் போட்டியிடுவதை தவிர்த்து விட்டு மாநிலங்களவைக்கு தேர்வான போது அது உறுதியாகிவிட்டது. கேரள மாநிலம் வயநாடு தொகுதியில் தனக்கு தோல்வி உறுதி என்பது காங்கிரஸின் இளவரசருக்கு தெரியும் .அங்கு தேர்தல் முடிந்த பிறகு அவர் வேறு தொகுதியை தேடுவார் என்று ஏற்கனவே கூறியிருந்தேன். இப்போது அமேதியை விட்டு ஓடி ரேபரேலியைத் தேர்வு செய்துள்ளார்.
இந்த நபர்கள் தான் ஊர் ஊராக பயணம் மேற்கொண்டு மக்கள் அச்சப்பட வேண்டாம் என பிரச்சாரம் செய்கின்றனர். அவர்களுக்கு நானும் அதையே கூறுகிறேன். அஓடாதீர்கள் மக்களவைத் தேர்தலில் இதுவரை இல்லாத அளவில் காங்கிரஸ் தோல்வியடையும் அவர்களுக்கு 50 இடங்கள் கிடைப்பது கூட கடினம் என்று பிரதமர் மோடி கூறினார்.