பாஜகவுடன் இணைந்து ஆட்சி அமைக்கவே முன்னுரிமை தரவேண்டும்! சிவசேனா எம்.எல்.ஏக்கள் கருத்தால் உத்தவ் தாக்கரே அதிர்ச்சி!
பாஜகவுடன் இணைந்து ஆட்சி அமைக்கவே முன்னுரிமை தரவேண்டும்! சிவசேனா எம்.எல்.ஏக்கள் கருத்தால் உத்தவ் தாக்கரே அதிர்ச்சி!
By : Kathir Webdesk
மகாராஷ்டிராவில் பரபரப்பான அரசியல் சூழ்நிலை ஏற்பட்டுள்ள நிலையில், சிவசேனா கட்சி எம்எல்ஏக்கள் கூண்டோடு வேறு கட்சிக்கு மாறலாம் என்ற அச்சம் நிலவுவதால் அக்கட்சி எம் எல் ஏக்கள் மும்பையின் மலாடு பகுதியில் உள்ள ஓர் ஓட்டலில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.
நேற்று இரவு சிவசேனா தலைவர் உத்தவ் தாக்கரே அந்த விடுதிக்கு சென்று கட்சி எம்எல்ஏ க்களை சந்தித்து அவர்களை உற்சாகப்படுத்தும் விதத்தில் பேசினார். அப்போது அவர் பேசுகையில் மாநிலத்தில் குடியரசு தலைவர் ஆட்சி ஏற்பட்டுள்ளதால் நீங்கள் யாரும் அஞ்ச வேண்டாம். நாம்தான் நிச்சயமாக ஆட்சி அமைப்போம் என்று கூறினாராம்.
அப்போது சில எம்எல்ஏ க்கள் பாஜக நம் கோரிக்கைகளை ஏற்கும் பட்சத்தில் அவர்களுடன் சேர்ந்துதான் நாம் ஆட்சி அமைப்பது நல்லது, காங்கிரஸ் அல்லது சரத்பவார் கட்சியுடன் கூட்டணி ஆட்சி வைத்தால் தர்ம சங்கடமான நிலை நமக்கு உண்டாகும், மேலும் எதிர்காலத்தில் மாநிலத்தில் அரசியல் செய்யவும் கடினமாக இருக்கும், பாஜகவுடன் மீண்டும் பேசி நல்ல முடிவுக்கு வர வேண்டும் என தங்கள் விருப்பத்தை தெரிவித்ததாக கூறப்படுகிறது,
இதனால் சற்று அதிர்ச்சி அடைந்த உத்தவ் தாக்கரே , “இப்போது உள்ள நிலையில் நம்மை யார் முதலில் தொடர்பு கொள்கிறார்கள் என்பதில்தான் உள்ளது. ஒருவேளை இருதரப்பினரும் (பாஜக, தேசியவாத காங்கிரஸ்) முதலமைச்சர் பதவியைப் பகிர்ந்துகொள்வது உட்பட நமது கோரிக்கைகளை ஏற்பதாக கூறினால், நமது முதல் தேர்வு பாஜகதான் என எம்எல்ஏக்களிடம் உத்தவ் தாக்கரே தெரிவித்துள்ளார்.
அப்போது ஆதித்ய தாக்கரே, ஏக்நாத் ஷிண்டே உள்ளிட்ட கட்சிகளின் மூத்த தலைவர்களும் உடன் இருந்தனர் எனவும், சிங்கப்பூரிலிருந்து வெளியாகும் பிரபல தமிழ் பத்திரிகை செய்தி வெளியிட்டுள்ளது.
https://www.tamilmurasu.com.sg/india/story20191114-36388.html