கொரோனா கட்டுப்பாடு - வெளிநாட்டில் சிக்கி தவிக்கும் நடிகர் பிருத்வி ராஜ்!
கொரோனா கட்டுப்பாடு - வெளிநாட்டில் சிக்கி தவிக்கும் நடிகர் பிருத்வி ராஜ்!

மலையாளத்தில் முன்னனி நடிகராக இருப்பவர் பிருத்வி ராஜ். இவர் தமிழிலும் பல படங்களில் நடித்துள்ளார். இவர் பிளஸ்ஸி இயக்கும் படத்தில் நடிப்பதற்காக சில நாட்களுக்கு முன்னர் படக்குழுவினருடன் ஜார்டான் சென்றுள்ளார். ஆனால், எதிர்பாராத விதமாக உலகெங்கும் கொரோனா பரவ தற்போது இந்தியாவில் வெளிநாட்டிலிருந்து வரும் விமானம் தரையிரக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. இதனால் அவர் இந்தியா திரும்ப முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.
இது குறித்து தனது இன்ஸ்டாகிராமில் "நாங்கள் கடினமான சூழ்நிலையில் தற்போது ஜோர்டானில் உள்ள வாடி ரம் என்ற இடத்தில் இருக்கிறோம். இந்த சூழலில் வேறு எங்கும் எங்களால் செல்ல முடியவில்லை. ஜோர்டானில் தற்போது சர்வதேச விமான போக்குவரத்தும் இல்லை. பாலைவனத்தில்தான் எங்கள் கூடாரம் உள்ளது. நாங்கள் கூடாரத்தில் உட்காரலாம் அல்லது படப்பிடிப்பை தொடரலாம் என்ற நிலை.
அதிகாரிகளுடன் பேசி கூடாரத்தில் இருந்து சில நிமிட தொலைவில் உள்ள தனிமையான இடத்தில் படப்பிடிப்பை நடத்தி வருகிறோம். பெரிய சவாலை உலகம் சந்திக்கிறது. மற்றவர்களிடம் இருந்து தள்ளி இருப்பதன் மூலமும் சுகாதாரமாக இருப்பதன் மூலமே இந்த தொற்றை கட்டுப்படுத்த முடியும்." என்று பதிவிட்டுள்ளார்.