Kathir News
Begin typing your search above and press return to search.

விநாயகர் சிலைகளை கரைக்கும் வழிமுறைகள் : மாசு கட்டுப்பாட்டு வாரியம் அறிவிப்பு

விநாயகர் சிலைகளை கரைக்கும் வழிமுறைகள் குறித்து மாசு கட்டுப்பாட்டு வாரியம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

விநாயகர் சிலைகளை கரைக்கும் வழிமுறைகள் : மாசு கட்டுப்பாட்டு வாரியம் அறிவிப்பு

KarthigaBy : Karthiga

  |  19 Sep 2023 1:30 AM GMT

சுற்றுச்சூழலை பாதுகாப்பதில் தொன்றுதொட்டு சிறந்த மாநிலமாக தமிழகம் விளங்கி வருகிறது. சுற்றுச்சூழல் பாதுகாப்பில் மக்களுக்கு மிகப்பெரிய கடமை இருக்கிறது. கடல் ஆறு மற்றும் குளம் போன்ற நீர்நிலைகள் வாழ்வாதாரமாக உள்ளன. விநாயகர் சதுர்த்தி விழாவை கொண்டாடும்போது நீர்நிலைகளை பாதுகாக்கும் வகையில் விநாயகர் சிலைகளை கரைப்பதற்கான மத்திய மாசு கட்டுப்பாட்டு வாரிய வழிகாட்டுதல்கள் www.tnpcb.gov.in என்ற இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளன. அதன்படி மாவட்ட நிர்வாகத்தினால் குறிப்பிடப்பட்டுள்ள இடங்களில் மட்டும் சிலைகளை கரைத்து சுற்றுச்சூழலை பாதுகாக்க ஒத்துழைப்பு வழங்க வேண்டும்.


களிமண்ணால் செய்யப்பட்டதும் பிளாஸ்டர் ஆஃப் பாரிஸ், பிளாஸ்டிக் மற்றும் தெர்மாகோல் கலவை அற்றதுமான சுற்றுச்சூழலை பாதிக்காத மூலப் பொருட்களால் மட்டுமே செய்யப்பட்ட விநாயகர் சிலைகளை நீர் நிலைகளில் பாதுகாப்பான முறையில் கரைக்க அனுமதிக்கப்படுகிறது. சிலைகளின் ஆபரணங்கள் தயாரிப்பதற்கு உலர்ந்த மலர் கூறுகள், வைக்கோல் போன்றவை பயன்படுத்தப்படலாம் .சிலைகளை பளபளப்பாக மாற்றுவதற்கு மரங்களின் இயற்கை பிசின்கள் பயன்படுத்தப்படலாம்.

ஒரு முறை பயன்படுத்தும் பிளாஸ்டிக் மற்றும் தெர்மாகோல் பொருட்களை பயன்படுத்த கண்டிப்பாக அனுமதிக்கப்பட மாட்டாது. நீர்நிலைகள் மாசுபடுவதை தடுக்கும் வகையில் வைக்கோல் போன்ற சுற்றுச்சூழலுக்கு உகந்த பொருட்கள் மட்டுமே சிலைகள் தயாரிக்க அல்லது பந்தல்களை அலங்கரிக்க பயன்படுத்த வேண்டும். விநாயகர் சிலைகளை மாவட்ட நிர்வாகத்தினால் குறிப்பிடப்பட்டுள்ள இடங்களில் மட்டும் மத்திய மாசு கட்டுப்பாட்டு வாரியத்தின் விதிமுறைகளின் படி கரைக்க அனுமதிக்கப்படும் .


SOURCE :DAILY THANTHI

Next Story
கதிர் தொகுப்பு
Trending News