Kathir News
Begin typing your search above and press return to search.

ரயில் பயணியின் உடமை திருட்டுக்கு ரயில்வே பொறுப்பாகாது - சுப்ரீம் கோர்ட் அதிரடி!

ரயிலில் பயணியின் உடமை திருட்டு போனால் ரயில்வே பொறுப்பு ஆகாது. அது ரயில்வேயின் சேவை குறைபாடு இல்லை என்று சுப்ரீம் கோர்ட் பரபரப்பு தீர்ப்பளித்தது.

ரயில் பயணியின் உடமை   திருட்டுக்கு ரயில்வே பொறுப்பாகாது - சுப்ரீம் கோர்ட் அதிரடி!
X

KarthigaBy : Karthiga

  |  17 Jun 2023 1:00 PM IST

சுரேந்தர் போலா என்ற தொழில் அதிபர் காசி விஸ்வநாத் ரயிலில் 2005- ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 27ஆம் தேதி அன்று டெல்லிக்கு பயணம் செய்தார்.இது முன்பதிவு பயணமாகும் . ரயில் பயணத்தின் போது அவர் இடுப்பில் பெல்ட் அணிந்து இருக்கிறார் .அந்த பெல்டின் பையில் ரூபாய் ஒரு லட்சம் பணமும் வைத்திருந்தாராம் அதிகாலை 3:30 மணிக்கு அவர் எழுந்த போது தனது இடுப்பில் அணிந்திருந்த பெல்ட் திருட்டு போனது கண்டு அதிர்ச்சி அடைந்தார்.


மறுநாள் காலையில் ரயிலில் இருந்து இறங்கிய பின்னர் அவர் ரயில்வே போலீசில் புகார் செய்தார். மேலும் அவர் தேசிய நுகர்வோர் குறைதீரர் ஆணையத்தில் ஒரு வழக்கு தொடர்ந்தார். அந்த வழக்கில் அவர் தனது ரயில் பயணத்தின் போது இடுப்பு பெல்ட் ரூபாய் ஒரு லட்சம் பணத்துடன் திருட்டு போய்விட்டதால் அந்த இழப்பை ரயில்வே தான் ஈடு செய்ய வேண்டும் என கூறினார்.


வழக்கை விசாரித்த தேசிய குறைதீர் ஆணையம் அவருக்கு ரயில்வே ரூபாய் ஒரு லட்சம் இழப்புடு வழங்க உத்தரவிட்டது. இந்த தீர்ப்பு ரயில்வேக்கு அதிர்ச்சி அளித்தது. உடனே தீர்ப்பை எதிர்த்து சுப்ரீம் கோர்ட்டில் மேல்முறையீடு செய்தது. இந்த மேல்முறையீட்டு வழக்கை நீதிபதிகள் விக்ரம் நாத், அசனுதீன் அமானுல்லா விசாரித்தனர்.


விசாரணை முடிவில் சுரேந்தர் போலாவுக்கு ரயில்வே ரூபாய் ஒரு லட்சம் இழப்பீடு தரவேண்டும் என்று தேசிய நுகர்வோர் குறைதீர் ஆணையம் அளித்த தீர்ப்பை ரத்து செய்து தீர்ப்பளித்தனர். சுப்ரீம் கோர்ட் தீர்ப்பில் "ரயில் பயணத்தின் போது தனது உடமையை பயணி பாதுகாத்துக் கொள்ள முடியாமல் திருட்டுப் போனால் அதற்கு ரயில்வே பொறுப்பு ஆகாது. ரயில் பயணத்தில் திருட்டு போனால் அது ரயில்வேயின் சேவை குறைபாடும் இல்லை" என்று கூறப்பட்டுள்ளது.

Next Story
கதிர் தொகுப்பு
Trending News