குழந்தைகள் தவறான நடத்தைக்கு சென்றால் பெற்றோருக்கு தண்டனை: விரைவில் புதிய சட்டம் !
குழந்தைகள் தவறான நடத்தை விதியோ அல்லது குற்றச்சம்பவங்களில் ஈடுபட்டாலோ பெற்றோர்களுக்கு தண்டனை வழங்கும் விதமாக சட்டம் கொண்டு வருவதற்கு சீன நாடாளுமன்றம் பரிசீலனை செய்து வருகிறது. சீனாவில் குடும்பக் கல்வி ஊக்குவிப்புச் சட்டம் என்று வரைவு தயாரிக்கப்பட்டுள்ளது. அதில் குழந்தைகளின் தவறான நடத்தைக்கு பெற்றோரை பொறுப்பாக்குவதுடன் குழந்தை வளர்ப்பு பற்றிய வகுப்புகளுக்கும் அவர்கள் அனுப்பி வைக்கப்படுவர். பெற்றோர்கள் மட்டுமின்றி குழந்தைகளின் பாதுகாவலர்களுக்கும் இச்சட்டம் பொருந்தும் என கூறப்படுகிறது.
By : Thangavelu

எனவே குழந்தைகளிடம் அதிகமான நேரத்தை பெற்றோர்கள் செலவிட வேண்டும். அவர்களுக்கு விளையாட்டை ஊக்குவிக்க வேண்டும். நல்ல செயல்களை கற்றுக்கொடுக்க வேண்டும் எனவும் இந்தச்சட்டம் பரிந்துரை செய்கிறது.
மேலும், வார இறுதி நாளில் வெள்ளிக்கிழமை, சனிக்கிழமை மற்றும் ஞாயிற்றுக்கிழமை மட்டுமே ஆன்லைன் விளையாட்டுகளை சிறுவர்கள் விளையாட அனுமதிக்க வேண்டும். இந்த சட்டத்திருந்தம் விரைவில் வெளியாகும் என கூறப்படுகிறது. இது போன்ற சட்டங்கள் இந்தியாவிலும் கொண்டு வந்தால் மாணவர்கள் நல்ல பாதையை தேர்ந்தெடுப்பார்கள் என்பது மாற்றுக் கருத்தில்லை.
Source, Image Courtesy: Daily Thanthi